Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், வேலை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் சோழனை கூட்டிட்டு நிலா வீட்டுக்கு போகிறார். அப்பொழுது சோழனுக்கு ஒரு சவாரி வந்திருக்கிறது என்று பிக்கப் பண்ண போகிறார். அங்கு பார்த்தால் நிலாவின் அப்பா மனோகர். உடனே அவரை கூப்பிட்டு போகும்பொழுது சாதாரணமாக எப்படி இருக்கீங்க என்று சோழன் கேட்கிறார்.
அதற்கு நிலாவின் அப்பா, கோபப்பட்டு பேசிய நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய பொண்ணே என் கூட வந்து விடுவாள். நீ வேண்டாம் என்று உன்னை தூக்கி எறிய போகிறாள் என்று சவால் விடுகிறார். அதற்கு சோழனும் சவால் விடும் விதமாக இனி நிலா உங்க பொண்ணு கிடையாது என்னுடைய மனைவி என்று கெத்தாக சொல்லிவிட்டார்.
அதனால் எப்படியாவது நிலாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று மனோகர், சேரன் மூலம் வீட்டிற்கு போகிறார். அங்கே மனோகர் நிலாவை பார்த்து செண்டிமெண்டாக பாசத்தைக் காட்டி பேச ஆரம்பிக்கிறார். உடனே நிலாவும் அப்பா பாசத்தில் பேச ஆரம்பிக்கும் பொழுது மனோகர் டிராமா போட்டு வீட்டுக்கு வா என்று கூப்பிட போகிறார்.
ஆனால் என்னதான் மனோகர் டிராமா போட்டாலும் நிலா, சோழன் குடும்பத்தை விட்டு போக மாட்டார். அதற்கு காரணம் இந்த குடும்பத்தின் மீது இருந்த நம்பிக்கையும் தாண்டி இங்கே தான் நிலா சந்தோசமாக இருக்கிறார். அதனால் எக்காரணத்தை கொண்டும் நிலா, சோழன் விட்டு வெளியே போகாமல் அந்த குடும்பத்தில் மருமகளாகவும் சோழன் மனைவியாகவும் இருப்பார்.