Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் கடந்த பல மாதங்களாக சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் அதிக புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியுடன் மோதிக் கொண்டு வருகிறது. ஆனால் விஜயா மற்றும் ரோகினி ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக போட்டி போட்டு தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார்கள்.
ரோகிணி தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட பொய்களை சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் விஜயா, மனோஜ்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற பிள்ளைகளை டீலில் விட்டு அவமானப்படுத்தி வருகிறார்.
இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக ரோகினி களத்தில் இறங்கி விட்டார். அதாவது ரோகினி செஞ்ச தவறால் கோபமாக இருக்கும் விஜயா. மனோஜிடம் இருந்து ரோகினையை பிரிப்பதற்காக பிளான் பண்ணினார். அந்த பிளானை தெரிந்து கொண்ட ரோகிணி அதே மந்திரவாதியிடம் சென்று மனோஜிடமிருந்து விஜயாவை பிரிப்பதற்கு தாயத்தை வாங்கி விட்டார்.
அந்த வகையில் விஜயா வாங்கிட்டு வந்த தாயத்தை மனோஜ் கையில் கட்ட முடியாத அளவிற்கு முத்து சொதப்பிவிட்டார். ஆனால் ரோகிணி வாங்கிட்டு வந்த தாயத்தை மனோஜ் கையில் சரியாக கட்டி விட்டார். அப்பொழுது மனோஜ் கையில் சூடான அயன் பாக்ஸ் பட்டு விட்டது.
உடனே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் விஜயா ரூமுக்குள் வந்து ரோகினையை திட்டுகிறார். ஒழுங்காக ஒரு வேலை கூட உன்னால் உருப்படியா பண்ண முடியாதா? என் பையனோட இருக்கிற வரை என் பையன் நிம்மதியாக இருக்க மாட்டான் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.
இதைக் கேட்ட மனோஜ், நீங்க ஏன் ரூம்குள்ள வந்தீங்க நாங்க பார்த்துக் கொள்கிறோம். முதலில் இந்த ரூமை விட்டு வெளியே போங்க என்று விஜயாவை பார்த்து கரராக சொல்லி விடுகிறார். இதை எதிர்பார்க்காத விஜயா வாயை மூடி நின்ற நிலையில் ரோகிணி மனசு அப்படியே குளுகுளுவென்று சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டது.
எனக்கு இனி இது போதும் என்பதற்கு ஏற்ப ரோகிணி விரித்த வலையில் மனோஜ் சிக்கிக்கொண்டார். இனி தான் மனோஜை வைத்து விஜயாவுக்கு ரோகிணி பாடம் கற்பிக்கப் போகிறார். மனோஜை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடிய விஜயாவிற்கு சிறந்த பதிலடியாக இருக்கப் போகிறது.