8000 பேர் உயிரைக் காப்பாற்றும் விஜய் டிவி பிரபலம்.. இதுவும் ஒருவிதமான போதை தான்

Vijay Tv: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரபலங்கள் சிறிய உதவி செய்தாலே அதை பிரபலப்படுத்துவதற்காக பல மடங்கு செலவு செய்கிறார்கள். மேலும் கோடிக்கணக்கில் அவர்களிடம் சொத்துக்கள் இருந்தாலும் உதவும் மனப்பான்மை என்பது குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் விஜய் டிவி பிரபலம் செய்துள்ள காரியம், இப்போது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒரு சின்ன நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே எப்படியும் பெரிய நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் தான் பலருக்கு இருக்கிறது. ஏனென்றால் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் விஜய் டிவியின் மூலம் தான் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். மேலும் விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற ஷோவில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் ஆனவர்தான் பாலா. டைமிங் காமெடியில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

இவரது சம்பளம் குறைவு என்றாலும் உதவும் மனப்பான்மை உள்ளதால் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் என்ற கிராமத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நிறைய உயிர் பறிபோய் இருக்கிறது.

இதை அறிந்த பாலா தனது சம்பாத்தியம் மூலம் இந்த ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த ஆம்புலன்ஸில் ஐசியூ வசதியும் இருக்கிறதாம். இதன் மூலம் 8,000 உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் பாலா. மேலும் இது அனைத்துமே ரசிகர்களால் தான் முடிந்தது.

அவர்களால் தனக்கு நிறைய நிகழ்ச்சி கிடைத்தது. என்னுடைய அப்பா ஒன்றும் பணக்காரர் இல்லை பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான் இன்று என்னால் இந்த ஆம்புலன்ஸை வழங்க முடிந்தது என்று பாலா கூறியிருக்கிறார். இதுவும் எனக்கு ஒரு விதமான போதை தான் என்று கூறினார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாலாவை பாராட்டி வருகிறார்கள்.