Mayor Priya Reply To Vishal: மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையால் சென்னை மாநகரம் இப்போது ஸ்தம்பித்து போய் உள்ளது. நகரின் பல பகுதிகளில் மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கி போய் உள்ளனர். இதையெல்லாம் பார்த்த பிறகு விஷால் ஆவேசத்துடன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில், ‘நாங்கள் எதற்கு வரிக்கட்டுகிறோம்னு கேட்க வைத்திடாதீர்கள்!. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எட்டு வருடங்களாக அந்தந்த தொகுதி எம்எல்ஏ-கள் என்னதான் பண்ணீங்க. இப்பயாவது எல்லோரும் வெளியே வந்து மக்களுக்கு உதவி பண்ணுங்கள்’ என்று ஆவேசத்துடன் பேசினார்.
இதற்கு இப்போது சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். ‘வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
விஷாலுக்கு காரசாரமான பதில் கொடுத்த மேயர் பிரியா
ஆனால் விஷால் பேசியதை கேட்கும்போது ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டு இருப்பது போல் சொல்லியிருக்கிறார். சினிமா படத்துல வர்ற டயலாக் எல்லாம் பேசி கைதட்டுகளை வாங்க முயற்சிக்க வேண்டாம். இது ஒரு பேரிடர், மிக்ஜாம் புயலை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்!’ என்று மேயர் பிரியா நடிகர் விஷாலுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.
விஷால் புயலால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தை குறித்து பேசி விளம்பரம் தேடுவதாக மேயர் பிரியா மட்டுமல்ல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் திட்டி தீர்க்கின்றனர். விஷாலை பொருத்தவரை வாய் மட்டும்தான். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியிலும் இருக்கிறார். ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அப்படி இருக்கும்போது எதற்கு இந்த வெட்டி வாய் என்று பலரும் கழுவி ஊற்றுகின்றனர்.