Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் குடும்பத்திற்கு நல்லது கெட்டதை எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் முத்துவிற்கு சீதா செய்து கொண்ட ரிஜிஸ்டர் மேரேஜ் பேரதிர்ச்சியாகிவிட்டது. அதுவும் இந்த கல்யாணத்தை மீனா தான் நடத்தி வைத்திருக்கார் என்றும் தெரிந்ததும் முத்து மொத்தமாக உடைந்து போய்விட்டார்.
இதனால் கோபப்பட்ட முத்து மண்டபத்தில் இருந்து வெளியேறி குடிப்பதற்கு பார் போய்விட்டார். மூத்த மருமகன் முத்து இல்லாமல் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சீதாவின் அம்மா பிடிவாதமாக சொல்லிவிட்டார். அதனால் மீனா, நான் சமாதானம் செய்து கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். உடனே சீதாவும் என் மீதும் தவறு இருக்கிறது, அதனால் நானும் வருகிறேன் என்று சொல்லி மீனாவும் சீதாவும் முத்துவை தேடி ஒயின்ஷாப்புக்கு போய்விடுகிறார்கள்.
அங்கே முத்துவை சமாதானப்படுத்தி பேசி பார்க்கிறார்கள். ஆனால் முத்து நிதானம் இல்லாமல் குடித்ததோடு சீதா மற்றும் மீனா செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு நொந்து போய் பேசுகிறார். ஆனாலும் சீதா மற்றும் மீனா நீங்க இல்லாமல் நாங்கள் போக மாட்டோம், கல்யாணமும் நடக்காது என்று சொல்லி பிடிவாதமாக அங்கே இருந்து விடுகிறார்கள். பிறகு மனசு மாறிய முத்து மண்டபத்திற்கு வந்து நிற்கிறார்.
உடனே அருண் சீதாவுக்கு கல்யாணம் நடந்து விடுகிறது. அதன் பிறகு என்னால் சீதாவுக்கு எந்தவித கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் இங்கே வந்து நின்றேன். மற்றபடி இனி உங்க குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காகவும் உங்க வீட்டு வாசலில் வந்து நிற்க மாட்டேன், நீயும் என்னுடைய வீட்டிற்கு வர வேண்டாம் என்று மீனாவிடம் சொல்லி உறவை முறித்துக் கொள்ளும் அளவிற்கு முத்து கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இதனால் மீனாவின் அம்மா கவலைப்பட ஆரம்பித்து விட்டார். ஒரு மகள் கரை சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு இன்னொரு மகள் என்னுடன் வந்து நிற்பது வேதனையாக இருக்கிறது என்று பீல் பண்ணி பேசுகிறார். ஆனால் மீனா, இதெல்லாம் கொஞ்சம் நாள் தான். நிச்சயம் நான் என்னுடைய வீட்டிற்கு போய் விடுவேன். அவரே வந்து என்னை கூட்டிட்டு போவார் என்று அம்மாவை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் இதெல்லாம் நடந்ததை பார்த்து ரோகிணி சந்தோஷப்பட்டு கொள்கிறாள். ஓவராக ஆடிய முத்து மற்றும் மீனாவிற்கு கிடைத்த தண்டனையாக நினைக்கிறார். அதுவும் இன்னும் மீனா வரமாட்டாள், முத்துவின் ஆட்டமும் அடங்கிவிடும் என்பதற்கு ஏற்ற மாதிரி இனி தன்னுடைய கை ஓங்கி விடும் என்று ரோகினி மெத்தனத்தில் இருக்கிறார்.