முத்து கையில் மீனா கட்டிய தாயத்து, அரண்டு போன விஜயா.. அம்மாவாக போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மற்றும் விஜயா தாயத்து வாங்கி மனோஜ் கையில் மாத்தி மாத்தி கட்டி விட்டார்கள். இதனால் மனோஜ் என்ன பண்ணினாலும் தாயத்து தான் வேலை செய்கிறது என்று இரண்டு பேரும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மனோஜ் சாதாரணமாக விஜயாவை ரூமை விட்டு வெளியே போக சொன்னார்.

உடனே ரோகிணி, தாயத்து தான் வேலை செய்கிறது என்று நம்பி சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் விஜயா சும்மா விடவில்லை வீட்டுக்குள் வந்து இதை வைத்து ஒரு டிராமா போட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே மனோஜ் மன்னிப்பு கேட்கும் விதமாக முட்டி போட்டு அம்மாவிடம் சரண்டர் அடைந்து விட்டார்.

இதை பார்த்த ரோகினி கடுப்பாகிவிட்டார், விஜயா சந்தோஷமாகிவிட்டார். இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த முத்துவுக்கு ஏதோ ஒரு வில்லங்கம் நடக்கிறது என்று தெரிந்து விட்டது. ஆனாலும் ரூம்குள் வந்த மனோஜ் இந்த அம்மா ரொம்ப ஓவராக தான் பண்றாங்க சும்மா சும்மா எல்லாத்துக்கும் சென்டிமென்ட் டிராமா போடுகிறார் என்று புலம்புகிறார். இதை கேட்டதும் ரோகிணி, தாயத்து வேலை செய்து அம்மாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார் என்று நினைக்கிறார்.

அடுத்ததாக பார்வதி வீட்டில் விஜயா இருக்கும் போது சிந்தாமணி வருகிறார். அப்பொழுது விஜயா, சிந்தாமணி இடம் மீனாவின் பணத்தை திருடியது தப்பு என்று சண்டை போட்டு சிந்தாமணியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதையெல்லாம் பார்த்த பார்வதி, பரவாயில்லை மீனா முத்துவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டாய் என்று சொல்கிறார். அதற்கு விஜயா, சப்போர்ட் எல்லாம் பண்ணவில்லை எதிரிகள் வளர வளர தான் மீனா முன்னேறிக்கொண்டே போவார்.

அதனால் தான் எதிரியே இல்லாமல் ஆக்குகிறேன், மீனா எப்பொழுதுமே எனக்கு வேலைக்காரியாக அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மறுபடியும் வன்மத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக சிட்டி ஜெயிலிலிருந்து வந்து முத்துவை பழிவாங்குவதற்கு பிளான் பண்ணுகிறார். அதுவும் இந்த பிளான் மூலம் நிரந்தரமாக முத்து எழுந்திரிக்கவே கூடாது அளவிற்கு அடி கொடுக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார்.

அடுத்ததாக மீனா கோவிலில் சீதாவை சந்தித்து சீதாவின் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது மீனா, கோவிலில் பூஜை செய்த தாயத்தை எடுத்துட்டு வந்து முத்து கையில் கட்டி விடுகிறார். அதாவது அதிகமாக கோபப்படக்கூடாது பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லி கட்டிய பொழுது முத்து, மீனாவை சீண்ட ஆரம்பித்து விட்டார். உடனே மீனா ஹாலில் இருந்த தளவானியை எடுத்து முத்து மீது எரிகிறார்.

முத்து விலகிய நிலையில் வீட்டுக்குள் நுழைந்த விஜயா முகத்தில் அந்த தளவாணி பட்டு விட்டது. உடனே மீனாவை கோபமாக விஜயா பார்க்கிறார். அத்துடன் முத்து கையில் இருக்கும் தாயத்தை பார்த்து இது எதற்கு இவன் கட்டி இருக்கான் என்னவாக இருக்கும் என்று வியப்பாக பார்க்கிறார். ஆனால் இந்த தாயத்தைப் பிரச்சினை எல்லாம் தாண்டி ரோகிணி இப்பொழுது வரை அந்த வீட்டில் டம்மியாகத்தான் இருக்கிறார்.

அந்த வகையில் இதெல்லாம் சரி செய்து மறுபடியும் ரோகினி ஆடும் அளவிற்கு ஒரு சம்பவம் கூடிய சீக்கிரத்தில் அந்த வீட்டில் நடக்கப்போகிறது. அதாவது ரோகிணி கர்ப்பம் என்ற விஷயம் வெளிவரப் பொழுது எல்லோரும் ரோகிணி செய்த தவறை மறந்து ரோகினியை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் மனோஜ், ரோகிணி தான் எல்லாம் என்பதற்கு ஏற்ப தலையில் தூக்கி வைத்து ஆடப்போகிறார். அதன் பிறகு தான் க்ரிஷ் பற்றிய விஷயம் வெளிவரும்.