குமரவேலுவை காலி பண்ணிய மீனா, சூழ்ச்சி பண்ணும் சக்திவேல்.. குற்ற உணர்ச்சியில் அவஸ்தைப்படும் பாண்டியன் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்தை பழி வாங்குவதற்காக தான் அரசியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்று பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்துவிட்டது. அதனால் அரசிக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பாண்டியன் முடிவு பண்ணிய நிலையில் சதிஷ் உடன் நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தார்.

இதனால் அரசி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். இந்த சமயத்தில் கோயிலுக்கு போயிருக்கும் அரசியை நேரடியாக சந்தித்து பேசலாம் என்று வந்த சதீஷ்க்கு குமரவேலுவை பற்றி அரசி சொல்லிவிட்டார். சதீஷும் என்ன சூழ்நிலை என்பதை புரிந்து கொண்டு அரசி மீது எந்த தவறும் இருக்காது என நினைத்து கல்யாணம் பண்ணுவதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே சொல்லிவிட்டார்.

இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்ட மீனா ராஜி, அரசியை பார்த்து சதீஷ் ரொம்ப நல்ல பையன், இவனை கல்யாணம் பண்ணினால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்லிய நிலையில் அரசிக்கும் சதீஷை கல்யாணம் பண்ணலாம் என்று எண்ணம் வந்துவிட்டது. அடுத்ததாக ராஜி நடனப் போட்டியில் இரண்டாவது சுற்றில் கலந்துகொண்டு அதிலும் வின் பண்ணி விட்டார்.

இந்த சூழலையில் சுகன்யாவிடம் இருந்து குமரவேல் அரசி எந்த ஊருக்கு போயிருக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் அதே வீட்டிற்கு குமரவேலு வந்து விட்டார். வந்ததும் அரசியை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக குமரவேலு வீட்டிற்குள் நுழைந்த பொழுது ஆடாவடித்தனமாக அரசிடம் பேச முயற்சி எடுத்ததால் கோமதி பார்த்து விட்டார்.

உடனே கோமதி, குமரவேலுவிடமிருந்து அரசியை காப்பாற்ற நினைக்கும் போது குமரவேலு கோமதியை தள்ளி விட்டார். அப்பொழுது கோம,தி மீனா மற்றும் ராஜியை கூப்பிட்ட பொழுது அவர்களும் வந்து விட்டார்கள். உடனே மீனா அரசியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அங்கு பக்கத்தில் இருந்த தோசை கல்லை வைத்து குமரவேலு தலையில் அடித்து விட்டார்.

இதனால் கீழே விழுந்த குமரவேலு மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்ததை பார்த்து ராஜிக்கு பயம் வந்துவிட்டது. உடனே ராஜி, குமரவேலு பக்கத்தில் செக் பண்ணி பார்க்கும் பொழுது அவன் இறந்து விட்டான் என்று சொல்லி அனைவரும் பயந்து போய் விட்டார்கள். இதனால் இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறக்க வேண்டும் என்று நான்கு பேரும் முடிவு பண்ண போகிறார்கள்.

ஆனாலும் இந்த குமரவேலு இறப்பதற்கு வாய்ப்பில்லை, இருந்தாலும் மீனாவின் வேலையை காலி பண்ண வேண்டும், அரசியை கல்யாணம் பண்ண வேண்டும் என்பதற்காக சக்திவேல் மற்றும் குமரவேலும் பிளான் பண்ணி இந்த விஷயத்தை பகடைக்காயாக வைத்து எல்லா சூழ்ச்சியும் பண்ணி பாண்டியன் குடும்பத்தை ஆட்டி படைக்கப் போகிறார்கள். அதுவரை பாண்டியனுக்கும் தெரியாமல் கோமதி ராஜி மீனா மற்றும் அரசி குற்ற உணர்ச்சியில் அவஸ்தைப்பட போகிறார்கள்.