Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு தலையில் மீனா அடித்ததால் மூச்சு பேச்சு இல்லாமல் மயக்கம் போட்டு விழுந்ததும் இறந்துவிட்டான் என்று ராஜி சொல்லிய நிலையில் எல்லோரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அந்த பயத்தினால் ராஜி கதிருக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார், மீனாவும் செந்திலுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார்.
இதனால் செந்தில் மற்றும் கதிர் பயந்து போன நிலையில் இருவரும் கிளம்பி போகிறார்கள். போகும்பொழுது செந்தில் ரொம்பவே பயத்தில் மீனாவை நினைத்து பீல் பண்ணி அழுது கொண்டே போகிறார். அப்பொழுது கதிர் எதற்கும் பயப்படாதே நம்ம குடும்பத்தையும் மீனா அன்னியையும் நாம் காப்பாற்றி விடலாம் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிட்டு போகிறார்.
ஆனாலும் மீனா, நான் ஒரு கொலை பண்ணிட்டேன் இனிமேல் என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டு ராஜியிடம் மன்னிப்பு கேட்கிறார். நான் வேண்டுமென்றே உன்னுடைய அண்ணனை அடிக்கவில்லை, அரசி கழுத்தில் கைய வைத்து கொன்னுடுவேன் என்று சொல்லியதால் அவனை தடுப்பதற்காக அடித்தேன்.
ஆனால் அதனால் அவனுடைய உயிர் போகும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று அழுது கொண்டே ஃபில் பண்ணுகிறார். கோமதியும் இந்த விஷயம் தெரிந்தால் கொலைகார குடும்பம் என்று சொல்லுவாங்க, அரசி கல்யாணமும் நின்றுவிடும், கடைக்கும் யாரும் வர மாட்டாங்க இனிமேல் அவ்வளவுதான் என்று சொல்லி கவலைப்படுகிறார்.
இப்படி ஆளுக்கு ஆள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராஜி எதார்த்தமாக குமரவேலு பக்கத்தில் போய் நின்று பார்க்கிறார். அப்பொழுது குமரவேலுவின் கை ஆடுவதை பார்த்து சந்தோஷத்தில் எல்லோரையும் கூப்பிடுகிறார். அப்படி கூப்பிட்டதும் அவர்கள் வந்து பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பொழுதும் குமரவேலு கை ஆடுவதும் மூச்சு விடுவதையும் தெரிந்து கொள்கிறார்கள்.
உடனே மீனா, அப்படி என்றால் நான் யாரையும் கொலை பண்ண வில்லை, எந்த தப்பும் நடக்கவில்லை என்று சந்தோஷப்பட்டு சொல்கிறார். கோமதியும் சந்தோஷமான நிலையில் ஒட்டுமொத்தமாக பெருமூச்சு விட்டு நிம்மதியாகி விடுகிறார்கள். ஆனாலும் மயக்கத்தில் இருக்கும் குமரவேலே ஆஸ்பத்திரியில் கூட்டிட்டு போய் சரி பண்ணலாம் என்று ஆம்புலன்ஸுக்கு ராஜி மற்றும் மீனா போன் பண்ணிய நிலையில் கோமதி ஒன்னும் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.
இப்பொழுது ஃபோன் பண்ணினால் எப்படி அடிபட்டிச்சு என்ன ஆச்சு என்று கேட்பார்கள், அத்துடன் குமரவேலு கண் முழித்து விட்டால் நடந்த விஷயத்தை சொல்லி நம்மளை மாட்டி விடுவான். அதனால் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி கதிர் மற்றும் செந்திலுக்கு போன் பண்ணி குமரவேலு சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறான் என்ற விஷயத்தை சொல்ல சொல்கிறார்.
உடனே ராஜியும் கதிருக்கு போன் பண்ண போய் விடுகிறார். ஆக மொத்தத்தில் கொலை பழியிலிருந்து மீனாவும் தப்பித்து பாண்டியன் குடும்பத்திற்கும் விமோசனம் கிடைத்துவிட்டது. அரசிக்கு குமரவேல் பற்றி தெரிந்து நிலையில் இனிமேல் குமரவேலு இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டார். அந்த வகையில் பாண்டியன் ஏற்பாடு பண்ண படி சதீஷ் உடன் அரசிக்கு கல்யாணம் நடந்து விடும்.
மேலும் செந்தில் மற்றும் கதிர் வீட்டுக்கு வந்த நிலையில் குமரவேலுவை காப்பாற்றும் விதமாக யாருக்கும் தெரியாமல் ட்ரீட்மென்ட் கொடுத்து குமரவேலுவை காப்பாற்றி விடுவார்கள்.