மீனாவின் தம்பிக்கு வந்த பிரச்சனை, உதவி கேட்ட சீதா.. ஒன்று சேரும் முத்து ட்ராபிக் போலீஸ், எஸ்கேப் ஆகிய ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்ற உண்மை இன்னும் யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனால் அதற்கு பதிலாக பணக்கார வீட்டு பொண்ணு மலேசியாவில் அப்பா இருக்கிறார் என்ற பொய் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. ஆனாலும் இந்த விஷயம் தெரிந்த பிறகு மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்து தான் வருகிறார்.

இருந்தாலும் கோபம் இருப்பதால் சரியாக பேச முடியாமல் தத்தளிக்கிறார். ஆனால் விஜயா, பண பேராசையில் இருந்ததால் ரோகிணி சொன்ன பொய்யை மன்னிக்க முடியாமல் ரோகிணியை காயப்படுத்தி வருகிறார். ஆனால் பார்ப்பவர்களுக்கு இது மட்டும் போதாது இன்னும் ரோகினி டார்ச்சர் அனுபவிக்க வேண்டும். முக்கியமாக ரோகிணி தான் அந்த வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்து மனோஜ்க்கு தேவையான எடுபிடி வேலைகளையும் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தான் மீனாவுக்கு விமோசனம் கிடைக்கும் என்று ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ரோகிணி இவ்வளவு தப்பு பண்ணிய பிறகும் கொஞ்சம் தெனாவட்டாகத்தான் இருக்கிறார். எப்பொழுதும் அந்த வீட்டின் வேலைக்காரி மீனாதான் என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார். இந்த விஷயத்திலிருந்து ரோகினி எஸ்கேப் ஆகிவிட்டார் என்பதால் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது.

அதனால் இனி அடுத்து கொஞ்ச நாளைக்கு விஜயாவிடம் சிக்கிக் கொண்டு ரோகிணி எல்லா வீட்டு வேலைகளையும் செய்து அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து லோக்கல் ரவுடி சிட்டி, சத்யாவை பரீட்சை எழுத விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக கடத்திட்டு வந்து மயக்க ஊசியை போடுவதற்கு ரெடி பண்ணி விட்டார்.

ஆனால் தம்பி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற பயத்தால் சீதா, முத்துவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார். உடனே முத்து, செல்வத்தை வர சொல்லி இதற்கு பின்னணியில் சிட்டி தான் இருப்பார் என்ற உண்மையை கண்டுபிடித்து விட்டார். ஆனாலும் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாததால் முத்து மற்றும் செல்வம் தேடி அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம் சீதா காதலிக்கும் ட்ராபிக் போலீஸ் அருணுக்கும் போன் பண்ணி தகவலை சொல்கிறார். அந்த வகையில் அருண், சத்யாவின் நம்பரை டிராக் பண்ணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சீதாவிடம் சொல்கிறார். உடனே சீதா முத்துவுக்கு போன் பண்ணி அந்த இடத்தை சொல்லி முத்து மற்றும் செல்வம் அங்கே போகிறார்கள்.

இதற்கு இடையில் லோக்கல் ரவுடி சிட்டி, சத்யாவை கட்டிப்போட்டு அந்த மயக்க ஊசியை போடுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் நிச்சயம் முத்து மற்றும் ட்ராபிக் போலீஸ் அருண் இருவரும் சேர்ந்து சத்யாவை காப்பாற்றி விடுவார்கள். இதனைத் தொடர்ந்து சீதா மற்றும் டிராபிக் போலீஸ் அருண் காதல் விவாகரம் மீனா மற்றும் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் டிராபிக் போலீஸ் எந்த விதத்திலும் கெட்டவர் இல்லை என்பதை புரிந்து கொண்டு சீதா ஆசைப்பட்டபடி கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவார்கள்.