பிக்பாஸ் வீடு தற்போது கலவர பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்களின் உச்சகட்ட வாக்குவாதங்களும், சண்டைகளும் நிகழ்ச்சியின் டிஆர்பி யை ஏற்றுகிறதோ இல்லையோ பார்ப்பவர்களின் பிபியை ஏற்றுகிறது.
அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடு தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதில் இன்றைய எபிசோடில் தனலட்சுமி மற்றும் அசல் இருவருக்கும் இடையே காரசாரமான சண்டை காட்சிகள் காட்டப்பட இருக்கிறது. அதாவது எப்போதுமே ஓவராக பேசிக்கொண்டு திரியும் அசல் தனலட்சுமியைப் பார்த்து ஆன்ட்டி என்று சொல்லி இருக்கிறார். இதனால் கடுப்பான தனலட்சுமி அவரை நன்றாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இந்த பிரச்சனையால் அழுது கொண்டிருந்த தனலட்சுமியிடம் விக்ரமன் என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். உடனே அசீம் தனலட்சுமி விளக்கம் கொடுக்க வரும்போது இடையில் புகுந்து நீ வா என்று கூப்பிடுகிறார். இதனால் டென்ஷனான விக்ரமன் அந்த பொண்ணு என்கிட்ட தானே பேசுது நீ ஏன் குறுக்க வர என்று கேட்கிறார்.
ஆனால் அசீம் நான் உன்கிட்ட பேசல என்று அவரிடம் சண்டைக்கு பாய்கிறார். இதனால் வீட்டின் தலைவரான ஜி பி முத்து இடையில் வந்து சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால் அசீமை அவர் கண்டிக்காமல் விக்ரமனை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் கோபமடையும் விக்ரமன் எல்லாரும் என்னை டார்கெட் பண்றீங்களா என்று கத்த ஆரம்பித்தார்.
மேலும் ஜிபி முத்துவை பார்த்து உங்கள் மேல் எனக்கு அன்பு இருக்கு. ஆனால் நீங்கள் என்னை மட்டும் ஓரம் கட்டுகிறீர்கள் என்று கூறுகிறார். அதனால் கோபமான ஜி பி முத்துவும் பதிலுக்கு அவரிடம் வாக்குவாதம் செய்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் விக்ரமன் தன்னுடைய விளையாட்டில் சரியாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் அவர் நியாயமாக பேசினாலும் அதிகப்படியாக பேசுவதால் சக போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்வதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவருக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அவர் கடந்த சீசன் ஆரியை போல் இந்த விளையாட்டில் முன்னேறுவார் என்றும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். அடுத்தடுத்த வாரங்களில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.