மீண்டும் மோதிக் கொள்ளும் முத்து அருண், தவிக்கும் மீனாவின் தங்கை.. ஸ்ருதியால் ஏற்பட்ட குழப்பம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் தன்னிடம் பேச வேண்டும் என்றால் மனோஜை சீண்டி பார்க்க வேண்டும் என்ற ரோகினி முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் மனோஜின் பயத்தை புரிந்து கொண்டு ரோகிணி வேறு யாரிடமோ பேசுவது போல் பேசி நடிக்கிறார். இதை கேட்டு மனோஜும் பயப்பட ஆரம்பித்து விட்டார்.

அடுத்ததாக சுருதி, ரவி ஹோட்டலை ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்து விட்டார். உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுருதியின் அம்மா வீட்டிற்கு வந்து ரவி ஆரம்பிக்கப் போகும் ஹோட்டலுக்கு உதவி பண்ணுகிறேன் என்று பணத்தை கொடுக்கிறார். இது எதுவும் தெரியாத அண்ணாமலை மற்றும் முத்து, என்னது ரவி ஹோட்டல் ஆரம்பிக்க போறானா? என்ற ஆச்சரியமாக கேட்கிறார்கள்.

அப்பொழுது சுருதி, ரவிக்கு இருக்கும் திறமைக்கு ஏன் இன்னும் அதே ஹோட்டலில் வேலை பார்க்க வேண்டும். அதனால் தான் உடனடியாக ஹோட்டல் ஆரம்பிப்பதற்கு எல்லா வேலையும் நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்று சொல்கிறார். ஆனால் இந்த விஷயத்தில் அண்ணாமலை மற்றும் முத்துக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் விஜயாவுக்கு இதில் சந்தோஷம் ஏற்பட்டதால் ரவியை வற்புறுத்தி அந்த பணத்தை வாங்க வைத்து விடுகிறார்.

அடுத்ததாக மீனாவின் தங்கை காதலிக்கும் நபர் யார் என்ற விஷயத்தில் முத்து கோபத்துடன் செல்வத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செல்வமும் நல்ல விஷயம் தானே, அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான், நல்ல சம்பளம் வாங்குகிறான். சீதாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வான் என்று சொல்கிறார். ஆனால் இதைக் கேட்டதும் முத்து கோவப்பட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு முத்து காரில் வரும்பொழுது எதிர்க்கே அருண் பைக்கில் வருகிறார். இரண்டு பேரும் ஒரு முட்டு சந்துக்குள் மோதியதால் நீ முதலில் போ, நான் முதலில் போகிறேன் என்று போட்டி போடும் அளவிற்கு மோதிக் கொள்கிறார்கள். அருணுக்கு முதலில் முத்து யார் என்று தெரியாது. ஆனால் இப்பொழுது காதலிக்கும் சீதாவின் மாமா என்று தெரிந்தும் மறுபடியும் மோதும் அளவிற்கு பிரச்சினை பண்ணுகிறார்.

இவர்கள் இரண்டு பேருடைய பிரச்சினையில் சீதா தவித்துக் கொண்டு வருகிறார். இதையெல்லாம் தாண்டி மீனா எப்படி முத்துவை சமாதானப்படுத்தி அருணுக்கும் சீதாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார் என்பதுதான் அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளாக இருக்க போகிறது.