Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய ரகசியங்கள் எதுவும் தெரியாமல் மனோஜ் மற்றும் விஜயா கண்மூடித்தனமாக ரோகிணியை நம்புகிறார்கள். அந்த வகையில் அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் விதமாக ரோகிணி கையில் டேட்டுவை குத்தி மனோஜை முட்டாளாக நம்ப வைத்து விடுகிறார். மனோஜும் விஜயாவும் அதற்கு ஏற்ற மாதிரி ரோகிணியின் பாசத்தை பார்த்து புல்லரித்து போய் விட்டார்கள்.
அடுத்ததாக மீனா பூ டெக்கரேஷன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறார் என்று உணர்ந்த சிந்தாமணி நேரடியாக பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கே விஜயா வருவதை தெரிந்துகொண்டு சிந்தாமணி காலுக்கு மேல் கால் போட்டு கெத்தாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து கடுப்பான விஜயா, என்ன திமிரு இந்த சிந்தாமணிக்கு ஏன் முன்னாடியே எப்படி இருக்கிறாள் என்று ஆத்திரம் அடைய ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது சிந்தாமணி, சாதாரண ஒரு மருமகளை தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியவில்லை, நீங்களா என்ன ஒரு மாமியார் என்று விஜயாவை சீண்டி பார்க்கும் அளவிற்கு சிந்தாமணி பேசி விடுகிறார். உடனே விஜயா, நான் என்ன நினைச்சாலும் அதை நடத்திக் காட்டுவேன். அந்த வகையில் மீனா எனக்கு ஒரு விஷயமே இல்லை என்று கூறுகிறார். உடனே சிந்தாமணி, அப்படி என்றால் மீனா செய்யும் டெக்கரேஷனை பண்ண விடாமல் தடுக்க முடியுமா என்று கேட்கிறார்.
அதற்கு விஜயாவும் ஏன் என்னால் முடியாது, நான் தடுத்து காட்டுகிறேன். இனி மீனா எந்த பிசினஸும் பண்ண முடியாத அளவிற்கு நான் ஆப்பு வைக்கிறேன் என்று சிந்தாமணி உசுப்பேத்தி பேசியதும் விஜயா, மீனாவின் பிசினஸுக்கு தடை போட முயற்சி எடுக்க போகிறார். அடுத்ததாக அண்ணாமலையின் நண்பர் பரசுராமன் மகளை முத்து மற்றும் மீனா கூட்டிட்டு வந்து வீட்டில் விடுகிறார்கள்.
அத்துடன் கசாப்பு கடை மணி, பரசுராமன் வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேசி விடுகிறார். இவர்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணுகிறார்கள். அந்த வகையில் இந்த ஒரு சம்பவத்தின் மூலம் கசாப்பு கடை மணி முத்துவுடன் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து முத்து மற்றும் செல்வம் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது அந்த வழியாக ட்ராபிக் போலீஸ் வேகமாக போன் பேசிக்கொண்டு ஹெல்மெட் போடாமல் போயிட்டு நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விடுகிறார். இதை பார்த்ததும் முத்து அவர் செய்த அனைத்து விஷயங்களையும் போன் மூலம் வீடியோ எடுத்து விடுகிறார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த டிராபிக் போலீஸ் நோ பார்க்கிங்கில் பைக்கை விட்டதால் அந்த பைக்கை எடுக்காத படி செயின் மூலம் லாக் போட்டு விடுகிறார்.
இதெல்லாம் வேண்டாம் தேவையில்லாத பிரச்சினை என்று செல்வம் தடுத்தும் முத்து கேட்காமல் கொஞ்சம் ஓவராகத்தான் டிராபிக் போலீசை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வீன்வம்பை விலைக்கு வாங்கி விடுகிறார். முத்துவுக்கு இருக்கும் பிரச்சனைக்கு இதெல்லாம் தேவையா என்பதற்கு ஏற்ப தான் முத்து தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைகிறார். சம்பந்தமே இல்லாமல் கதைகளை காட்டி ரோகிணி பற்றிய ரகசியங்கள் வெளியே வராமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது.