Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவிடமிருந்து பணத்தை திருடியது சிந்தாமணி தான் என்று முத்துவுக்கு தெரிந்து விட்டது. அதனால் சிந்தாமணி இடம் இருக்கும் மீனாவின் பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று முத்து பிளான் பண்ணிவிட்டார். அந்த வகையில் தினமும் சிந்தாமணி, விஜயாவிடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்வதற்கு பார்வதி அத்தை வீட்டிற்கு போவார் என்பதை முத்து தெரிந்து கொண்டார்.
உடனே பார்வதிக்கு போன் பண்ணி முத்துவின் பிளான் அனைத்தையும் சொல்லி சிந்தாமணி அங்கே வந்துவிட்டால் ஒரு 3 மணி நேரம் எப்படியாவது பேசி அங்கே இருக்க வைங்க. மற்றபடி நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். பார்வதியும் அதற்கு சம்மதித்த நிலையில் முத்து செல்வம் ஸ்ருதி மற்றும் ரவி என அனைவரும் சேர்ந்து சிந்தாமணி வீட்டுக்கு இன்கம் டேக்ஸ் ஆபிஸராக போய்விட்டார்கள்.
சிந்தாமணி வெளியே போனதை பார்த்ததும் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள் அங்கே வேலை பார்ப்பவர்களிடம் சுருதியை ஒரு ஆபீஸராக பேச சொல்கிறார்கள். சுருதி மற்றும் ரவி இங்கிலிஷ் ஹிந்தி என பேசியதும் அங்கு இருப்பவர்கள் நம்பி விடுகிறார்கள். இருந்தாலும் அங்கே இருக்கும் ஒரு நபர் ரெண்டு மூணு கேள்வி கேட்டு சந்தாமணிக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னதும் கோவப்பட்ட சுருதி எல்லோருடைய போனையும் வாங்கி அந்த நபரின் கன்னத்தில் அடித்து விடுகிறார்.
சுருதி அடித்ததும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக நின்று விட்டார்கள். உடனே எல்லோரும் வீடு முழுவதும் செக் பண்ணி மீனா மஞ்சப்பையில் வைத்திருந்த பணம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். கடைசியில் சிந்தாமணி வீட்டு பீரோவில் முத்து செக் பண்ணி பார்க்கும் பொழுது அதில் அந்த மஞ்சள் பை இருப்பதை பார்த்து விடுகிறார்.
உடனே முத்து, ஸ்ருதி ரவி மற்றும் செல்வத்திடம் சொல்லி மீனாவின் பணம் கிடைத்து விடுகிறது என்று அங்கு இருந்து கிளம்புவதற்கு தயாராகி விட்டார்கள். இதற்கு இடையில் பார்வதி வீட்டிற்கு காரில் போய்க்கொண்டிருக்கும் சிந்தாமணி வயிறு சரியில்லை என்று சொல்லி வீட்டிற்கு திரும்ப வருகிறார். ஆனால் அதற்குள் முத்துவுக்கு அந்த பணம் திரும்ப கிடைத்து விட்டதால் அங்கிருந்து போய் விடுகிறார்கள்.
பிறகு வீட்டிற்கு வந்த சிந்தாமணி நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு கொண்டிருக்கும் பொழுது மீனா, சிந்தாமணிக்கு போன் பண்ணி உன் வழியிலேயே போய் என்னுடைய பணத்தை எடுத்து விட்டோம் என்று சொல்லி சிந்தாமணியின் வன்மத்திற்கு பதிலடி கொடுத்துவிடுகிறார். மேலும் மீனாவிற்கு தொலைந்து போன பணம் கிடைத்துவிட்டது என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்த நிலையில் வைத்திருச்சலில் விஜயா இருக்கிறார்.
ஆனாலும் இதற்கு காரணம் விஜயா தான் என்ற விஷயம் முத்து மற்றும் மீனாவிற்கு தெரிந்ததால் விஜயா அவமானப்பட்டு நிற்கிறார். இது மட்டும் இல்லாமல் இனி மீனாவின் முன்னேற்றத்தைக் கண்டு விஜயா பொறாமையில் தவிக்கப் போகிறார்.