Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பொய்பித்தலாட்டம் பண்ணியது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்ததால் விஜயா பயங்கர கோபத்தில் இருக்கிறார். அத்துடன் ரோகிணி ஷோரூம்க்கு வரக்கூடாது, மனோஜிடம் பேசவும் கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டார். இதனால் ஷோரூம் இல் தனியாக இருக்கும் மனோஜ்க்கு பிசினஸும் கொஞ்சம் டல் அடிக்கிறது.
அங்கே வந்த மனோஜின் நண்பர் உன்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் உன் மனைவி ரோகிணி தான். நீ எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை பார்க்காமல் இருந்த பொழுது ரோகிணி தான் உன்னை தூக்கி நிறுத்தி உனக்கு சரியான வழியை தேர்ந்தெடுத்து கொடுத்து வெற்றியை பார்க்க வைத்தார். அப்படிப்பட்ட உன்னுடைய மனைவி கொஞ்சம் தவறு செய்திருந்தாலும் எல்லாம் உனக்காக தான் என்று நினைத்து ரோகினையை மறுபடியும் கூட்டிட்டு வா.
அப்பொழுது தான் உன்னுடைய வாழ்க்கையும் பிசினஸும் பிரகாசமாக அமையும் என்று எடுத்துச் சொல்கிறார். அந்த நேரத்தில் ரோகினி கடைக்கு வந்து மனோஜிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்கிறார். அப்படி பேசிய பொழுது நான் பொய் சொன்னது தவறுதான். ஆனால் அதற்கு காரணம் நீ தான். உன்னுடன் நான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நான் பொய் சொன்னேன்.
ஆனால் அந்த பொய்க்கு பின்னால் உனக்கு நன்மைகள் பல அமைந்திருக்கிறது. இதை புரிந்து கொள், என்னால் உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது என்று மனம் உருகி ரோகிணி, மனோஜிடம் பேசுகிறார். அத்துடன் கடைசி வரை உங்க அம்மா உன்னுடன் வரப்போவதில்லை நான் தான் உன்னுடன் இருக்கணும் நமக்கான வாழ்க்கை நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்று மனோஜ் புத்திக்கு உரைக்கும் படி ரோகிணி பல விஷயங்களை போட்டு உடைக்கிறார்.
அந்த வகையில் மனோஜ் மனசும் மொத்தமாக மாறப்போகிறது. ரோகிணியை நம்பி விஜயா பேச்சை மீறி ரோகினிடம் சரண் அடைந்து விடுவார். ரோகிணி விரித்த வலையில் மனோஜ் சிக்குவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஜயாவிற்கு சரியான பதிலடியாக இருக்கப் போகிறது. அடுத்ததாக சத்யாவை காணவில்லை என்று சீதா முத்துவுக்கு போன் பண்ணி சொல்லியதால் முத்து எல்லா பக்கமும் தேடிப் பார்க்கிறார்.
அந்த வகையில் மீனாவுக்கும் தெரிந்ததால் மீனா முத்து மற்றும் செல்வம் மூன்று பேரும் சேர்ந்து சிசிடி கேமரா மூலம் லோக்கல் ரவுடி சிட்டி தான் சத்யாவை கடத்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்து விட்டது. உடனே கோபப்பட்ட முத்து இந்த பிரச்சனைக்கு பிறகு சிட்டி நம் பக்கமே வரக்கூடாது என்று முடிவு பண்ணி சத்யாவை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு முத்து போய் லோக்கல் ரவுடி சிட்டிக்கு முடிவு கட்டப் போகிறார். இதை லோக்கல் ரவுடி சிட்டி முத்து மீனா மற்றும் சத்திய வாழ்க்கையில் தலையிட மாட்டார்.