Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து செய்த தவறுக்கு எல்லாம் மீனாதான் பலியாடாக சிக்குகிறார். அப்படித்தான் இப்பொழுது அருண் விஷயத்திலும் முத்து மாட்டியதால் மீனா அவஸ்தைப்படுகிறார். எப்படியாவது புருஷனை காப்பாற்றி பிரச்சனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று, தெரிந்த போலீஸிடம் உதவி கேட்டு இருக்கிறார்.
அவரும் உதவி பண்ணுகிறேன் என்று சொல்லிய நிலையில் முத்து நண்பர்களுடன் குடித்துவிட்டு அருண் வீட்டுக்கு சென்று பிரச்சனை செய்த பொழுது அருண் அதை வீடியோ எடுத்து விடுகிறார். அந்த வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி வைத்த நிலையில் போலீஸ், மீனாவை கூப்பிட்டு உன் புருஷன் பண்ண காரியத்தை பாரு. இதற்கு மேலும் என்னால் உதவி பண்ண முடியாது.
முதலில் இருந்த பிரச்சனையாவது சின்ன பிரச்சனை ஏதாவது பண்ணி வெளியே கொண்டு வந்துவிடலாம். ஆனால் இப்பொழுது போலீஸ் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் கொடுத்திருப்பது பெரிய குத்தம் ஆகிவிட்டது. அதனால் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார். உடனே மீனா, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஏதாவது உதவி கேட்கலாம் என்று போகிறார்.
அங்கே போன இடத்தில் மீனா, போலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே இருந்த ஒரு கான்ஸ்டபிள் கை உடைந்த நிலையில் டிராபிக் போலீஸ் அருண் சொன்னதை நம்பி ஒரு காரை எடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். ஆனால் அந்தக் காரில் பிரேக் ஒயர் பிடிக்கவில்லை. இதை வெளியே சொல்ல கூடாதுன்னு சொல்லிவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இதை கேட்டதும் மீனா, அது என்னுடைய வீட்டுக்காரர் தான். தயவு செய்து என்னை உங்களுடைய மகளாக நினைத்து நடந்த உண்மையை சொல்லுங்க. அப்பொழுதுதான் என்னுடைய புருஷன் மீது எந்த தப்பு இல்லை என்று பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கெஞ்சுகிறார். ஆனால் அந்த கான்ஸ்டபிள் உண்மையை சொல்ல மறுத்து விடுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே மீனா தவித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அங்கே வந்த நிறை மாத கர்ப்பிணிக்கு மீனா உதவி பண்ணுகிறார். இதை பார்த்த கான்ஸ்டபிள்க்கு மனசு மாறி விட்டது. உடனே போலீஸ் வந்ததும் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். பிறகு அந்த போலீஸ் முத்துவை கண்டித்து காரையும் கொடுத்து விடுகிறார். அடுத்ததாக மீனா, முத்துவை கூட்டிட்டு வீட்டுக்கு வருகிறார். அப்படி முத்து வந்ததும் என்னுடைய காரில் பிரேக் ஒயர் பிடிக்கவில்லை.
ஆனால் அதை வேண்டுமென்று கட் பண்ணி விட்டு இருக்காங்க. அப்படி கட் பண்ண வேண்டும் என்றால் என்னுடைய கார் சாவி இருந்தால் மட்டும்தான் முடியும். அதனால் நம் வீட்டில் இருப்பவர்கள் தான் யாரோ கார் சாவியை எடுத்து இந்த மாதிரி பண்ணி இருக்காங்க என்று முத்து சொல்கிறார். உடனே முந்திரிக்கொட்டை மாதிரி ரோகிணி முந்திக்கொண்டு என்ன முத்து என் மீது சந்தேகப்படுகிறீர்களா?
ஏற்கனவே அத்தை என் மீது கோபத்தில் இருப்பதால் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறேன். இதுல வேற நான் தான் என்னமோ நீங்க ஆணில் சாவியை கோர்த்து போட்டிருந்ததை எடுத்தது போல் சொல்றீங்க என ரோகிணி சொல்கிறார். உடனே முத்து ஆணில தான் சாவி போட்டு இருந்தது என்று நான் சொல்லவே இல்லையே.
நீங்களா சொல்றீங்க என்ன விஷயம் என்று கேட்ட பொழுது ரோகினி மாட்டிக்கொண்டு முழிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் ரோகிணி ஏதாவது சொல்லி சமாளித்தாலும் முத்து மற்றும் மீனாவிற்கு இந்த விஷயத்தில் ரோகிணி மீது சந்தேகம் வந்துவிட்டது. இதற்கிடையில் சிட்டி கொடுக்கும் செயினை வாங்கி விஜயாவிடம் கொடுத்து எப்படியாவது காக்கா பிடிக்க வேண்டும் என்று ரோகிணி பிளான் போட்டிருக்கிறார்.