Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அருண் சொன்னபடி மீனா, சீதாவிற்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைப்பதற்கு ஒத்துக்கொண்டார். இது சம்பந்தமாக சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் அருண் மீனா மற்றும் சீதா 3 பேரும் சேர்ந்து பேசிக் கொள்கிறார்கள். என்னதான் இதற்கு மீனா சம்மதம் கொடுத்தாலும் இந்த விஷயம் தெரிந்தால் முத்து எப்படி எடுத்துக் கொள்வார் என்பதை பற்றி பயத்தில் தான் இருக்கிறார்.
இருந்தாலும் சீதாவின் வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுப்பதற்கு மீனா தயாராகி விட்டார். அதே நேரத்தில் முத்துவின் நண்பர் முருகன், முத்துவை சந்தித்து எனக்கும் வித்யாவுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஆனால் என்னுடைய அண்ணன் சம்மதம் கொடுக்க மாட்டார். அதனால் எனக்கும் வித்யாவுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க வேண்டும் என்று முத்துவிடம் முருகன் உதவி கேட்கிறார்.
முத்துவும் உங்கள் இருவருக்கும் நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். அது சம்பந்தமான விஷயங்களை நானே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் மீனாவின் தம்பி சத்தியா காலேஜில் பாஸ் பண்ணி விட்டார் என்ற சந்தோசத்தை மீனா சீதாவிடம் சொல்கிறார். அப்பொழுது இதற்கு முக்கிய காரணமாக இருந்தது முத்து மாமா தான் என்று சொல்லி முத்துவையும் சந்தித்து இனிப்பு கொடுத்து சத்தியா நன்றியை தெரிவிக்கிறார்.
கடைசியில் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதற்காக மீனா, சீதா அருணை கூட்டிட்டு போகப் போகிறார். அங்கே முருகன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண வேண்டும் என்பதற்காக முத்து அதே இடத்திற்கு விசாரிப்பதற்கு வரப்போகிறார். அப்பொழுது எதிரும் புதிருமாக முத்து மற்றும் மீனா ரிஜிஸ்டர் ஆபீசில் நிற்கப் போகிறார்கள். இதில் ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சனைகளும் வரப்போகிறது.
அடுத்ததாக சிந்தாமணியின் பிறந்தநாள் ஃபங்க்ஷனை கொண்டாடுவதற்காக பார்வதி மற்றும் விஜயா இருவரும் கலந்து கொள்கிறார்கள். அங்கே ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய நிலையில் சிந்தாமணியின் தோழி ஒருவர் வந்து விஜயா போட்டிருந்த செயினை பார்த்து இது என்னுடைய செயின். கொஞ்சம் நாளைக்கு முன் திருடு போயிருந்தது என்று எல்லோரும் முன்னாடியும் சொல்கிறார். இதனால் அனைவரது முன்னாடியும் விஜயா அவமானப்பட்டு நிற்கப் போகிறார்.
பிறகு அந்த செயினை சிந்தாமணியின் தோழிக்கு விஜயா கொடுத்து விடுவார். அடுத்து வீட்டிற்கு வந்த விஜயா திருட்டுச் செயினை என்னிடம் கொடுத்தாய் என்று ரோகிணியை திட்டி அடிக்க போகிறார். இதற்கிடையில் ரோகிணி போட்ட ட்ராமாவை நம்பி விஜயா, மனோஜ் மற்றும் ரோகினி இருவரையும் கூப்பிட்டு இனிமேலாவது என்னிடம் பொய் சொல்லாமல் ஒழுங்காய் இருக்கணும். மனோஜ் கூட நீ ஷோரூம் போயிட்டு வரலாம். ஆனால் பணக்கார மருமகளாக நீ மாற வேண்டும்.
அப்பொழுதுதான் எனக்கு அது கௌரவமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். ஆனால் அடுத்த நிமிஷமே செயின் பிரச்சனை வந்ததால் மறுபடியும் விஜயா, ரோகினியை வெறுத்து ஒதுக்க போகிறார். ரோகிணி என்னதான் தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் ஈசியாக எஸ்கேப் ஆகி விடுகிறார். எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிற விஷயம் வெளி வந்தால்தான் ரோகிணியின் ஆட்டம் ஒரேடியாக நிற்கும்.