ஓவராக ஆடிய முத்துவிற்கு ஏற்பட்ட சிக்கல், உதவி செய்யப் போகும் அருண்.. வெளிவரும் சீதாவின் காதல்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கண்ணுக்கு தெரிந்த எதிரியை கூட சமாளித்து விடலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் முதுகில் குத்தும் எதிரியால் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வோம். அப்படித்தான் ரோகிணி சிட்டிக்கு செய்த உதவி மூலம் தற்போது முத்து வசமாக மாட்டிக் கொண்டார். அதாவது முத்துவை சிக்க வைக்க வேண்டும் என்று முத்துவின் காரில் இருக்கும் பிரேக் வயரை கட் பண்ணி விட்டார்.

இது தெரியாமல் கார் ஓட்டிய முத்து ஹேண்ட் பிரேக் கூட போடாமல் டிராபிக் போலீஸ் அருண் பைக்கை இடித்து கீழே தள்ளி விட்டார். ஏற்கனவே அருண், முத்து செய்த காரியத்தால் கடுப்பில் இருந்தார். தற்போது முத்து மீது சரியாக ஒரு கேஸ் போடுவதற்கு வாய்ப்பு அமைந்தது போல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.

சும்மா இருந்த அருணை சீண்டிப் பார்க்கும் விதமாக முத்து குடித்துவிட்டு அருனிடம் ஓவராக ரகளை பண்ணினார். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்போது அருண், முத்துவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயி உயர் அதிகாரியிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். அவரும் முத்து மீது தவறு இருக்கிறது என்று சொல்லி முத்துவின் காரை ஸ்டேஷனில் வைக்கும்படி சொல்லிவிட்டார்.

இதனால் கோபத்தில் இருக்கும் முத்து, அருணிடம் மல்லு கட்டுகிறார். உடனே அருண், இந்த சந்தர்ப்பத்திற்காக தான் நான் ரொம்ப நாளா காத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது கையும் களவுமாக என்னிடம் மாட்டிக் கொண்டாய். உன்னுடைய லைசென்ஸை நான் கேன்சல் பண்ணிவிட்டு வேலை இல்லாமல் நடுத்தெருவில் அலைய விடுகிறேன் என்று மொத்த கோபத்தையும் முத்து மீது காட்டுகிறார்.

அதற்கு முத்து அதிகார பலம் உங்க கையில் இருக்கிறது என்பதற்காக கஷ்டப்படும் எங்களை மாதிரி ஆட்களை தண்டிக்காதிங்க என்று சொல்கிறார். ஆனால் அருண் இந்த முறை முத்துவை விடக்கூடாது என்று முடிவில் தீர்மானமாக இருக்கிறார். இதற்கிடையில் முத்துக்கும் அருணுக்கும் நடுத்தெருவில் ஏற்பட்ட பிரச்சனையை அங்கு இருந்த சுருதி அம்மா வீடியோ எடுத்து விட்டார்.

இந்த வீடியோ மூலமாக எப்படியாவது ரவி சுருதியை அந்த வீட்டில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவர் ஒரு பக்கம் பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் என்ன ஆனாலும் சுருதி, நிச்சயம் நியாயத்தின் பக்கம் இருக்கும் வகையில் புகுந்த வீட்டிற்கு தான் சப்போர்ட் பண்ணுவார். அடுத்ததாக இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ரோகிணி தான் ஆனாலும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மனோஜின் ஷோரூம் கடைக்கு போய்விடுகிறார்.

அங்கே மனோஜ் வந்தவுடன் ரோகிணி என்னமோ ரொம்ப நல்லவள் மாதிரியும் விஜயா நம்மளை பிரிக்க பார்க்கிறார் என்பதற்கு ஏற்ற மாதிரி மனோஜிடம் சொல்கிறார். எப்படியாவது மனோஜிடம் பேசி பழைய மாதிரி ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது மனோஜ்க்கு தூபம் போடுகிறார். ஆனால் மனோஜ் எதுனாலும் எங்க அம்மா சொன்னா தான் கேட்பேன் என்று சொல்லிவிடுகிறார்.

இதனை அடுத்து முத்து மற்றும் அருண் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க போகிறது. இந்த விஷயம் மீனா மூலம் சீதாவிற்கு தெரிய வரும்பொழுது அருணுக்கு முத்து யாரு என்பதும் தெரிய வந்துவிடும். அதன் பிறகு முத்துவை காப்பாற்றி எந்தவித பிரச்சனையும் பண்ணாமல் வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அருண் எல்லா உதவிகளையும் செய்து முத்து மற்றும் அருண் சகலை ஆகி விடுவார்கள். அதற்கான ஆரம்பம்தான் இந்த பிரச்சினைக்கான பிள்ளையார் சுழி.