Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா செஞ்சது தவறு என்று மீனாவுக்கு தெரிந்ததால் முத்து வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னதை சரி என்று ஏற்றுக் கொண்டார். ஆனாலும் மாமனாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டு தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்கிறார்.
ஆனால் எதையும் காது கொடுத்து கேட்க முடியாமல் நிதானத்தை தவறவிட்ட முத்து, மீனாவை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். மீனா நான் போகிறேன் என்று சொல்லி அங்கே இருந்து கிளம்பி அம்மா வீட்டுக்கு வருகிறார். மீனாவை பார்த்ததும் சத்யாவும் அம்மாவும் ரொம்பவே பீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் மீனா என் வீட்டுக்காரர் பற்றி எனக்கு தெரியும்.
அவரே வந்து என்னை கூட்டிட்டு போவாரு என்று ஆறுதலாக சொல்கிறார். இதற்கு இடையில் அருண் மற்றும் சீதாவுக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயம் எல்லாம் நடக்க ஆரம்பித்து விட்டது. அப்பொழுது சீதா, முத்துவை பற்றி பெருமையாக பேசியதை கேட்ட அருண் இந்த குடும்பத்திலிருந்து முத்துவின் பெயரை இல்லாமல் ஆக்குகிறேன். முத்துவை அசிங்கப்படுத்தி டேமேஜ் பண்ணுவேன் என்று சகுனி வேலையை பார்ப்பதற்கு திட்டம் போட்டு மனதிற்குள் பேசிக் கொள்கிறார்.
அந்த வகையில் இந்த அருண் திருந்தவும் இல்லை, முத்து சொன்ன மாதிரி அந்த அளவுக்கு நல்லவரும் இல்லை என்பது புரிகிறது. அடுத்ததாக மீனா இத்தனை நாளாக அந்த வீட்டில் ஒரு வேலைக்காரி போல் எல்லா வேலையும் பார்த்து வந்தார். தற்போது அந்த இடத்தில் ரோகிணி இருப்பதால் காலையில் எழுந்ததும் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார்.
ஆனால் அதை யாராலும் குடிக்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதால் விஜயா திட்டுகிறார். உடனே ரோகினி எனக்கு தெரிந்ததை தான் நான் சமைக்க முடியும் என்று சொல்லுகிறார். அதற்கு விஜயா, இவ்வளவு நாள் அந்த வேலைக்காரி இங்கே தானே இருந்தால், அவளிடம் கற்று இருக்கலாமே என்று மீனாவை பற்றி சொல்கிறார். இதைக்கேட்டு முத்து கோபப்பட்டு அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை.
என் பொண்டாட்டி என்று மீனாவுக்கு சப்போர்ட்டாக அனைவரிடமும் சண்டை போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் முத்து மனதில் மீனா இருக்கும் வரை இவர்களுக்குள் பிரிவே இல்லை. கூடிய சீக்கிரத்தில் முத்து, மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார்.