சிந்தாமணிக்கு ஆப்பு வைத்த முத்து, அடுத்து விஜயாவுக்கு விரித்த வலை.. மீனா சொதப்பலால் எஸ்கேப் ஆகிய ரோகினி

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா டெக்கரேஷன் மூலம் லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டால் கையில் வருமானம் வந்து விடும். முத்துவும் மீனாவும் வாழ்க்கையில் ஜெயித்து விடுவாங்க, அப்புறம் நம்மள மதிக்க மாட்டாங்க என்ற நினைப்பில் விஜயா, மீனாவும் முத்துவும் முன்னேற கூடாது என்ற விஷயத்தில் வன்மத்துடன் இருக்கிறார்.

அதற்காக தான் மீனா பணத்தை எடுத்துட்டு போகும் போது அதை தடுப்பதற்காக விஜயா, சிந்தாமணி இடம் சொல்லி அந்த பணத்தை திருட சொல்லிவிட்டார். இதனால் மன வருத்தத்தில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மீனாவுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று யோசித்த முத்து இந்த திருட்டுக்கு பின்னாடி இருப்பது சிந்தாமணி தான் என்பதை கண்டுபிடித்து விட்டார்.

அந்த வகையில் குறுக்கு வழியில் யோசிக்கும் சிந்தாமணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த முத்து புதுசாக ஒரு பிளான் போட்டுவிட்டார். அந்த பிளான் படி முத்துவின் நண்பர் செல்வம், ரவி மற்றும் சுருதி அனைவரும் சிஐடி ஆபீஸராக சிந்தாமணி வீட்டிற்குள் நுழைந்து ரைடுக்கு வந்திருப்பதாக சொல்லி மீனா ஏமாந்த பணத்தை சிந்தாமணி வீட்டில் இருந்து மீட்டெடுத்து விட்டார்.

பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மீனா, சிந்தாமணிக்கு போன் பண்ணி அடுத்தவங்க பொருளுக்கு அடுத்தவங்க வாய்ப்புக்கு ஆசைபடாதீங்க சிந்தாமணி. நியாயமா தோத்து போயிருந்தால் வாய்ப்பு உங்களையும் தேடி வரும் என்று சொல்லி நீயும் வாழு மற்றவர்களையும் வாழவிடு என ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்துவிட்டார். அந்த வகையில் மீனாவுக்கு எப்படியும் இந்த டெக்கரேஷன் ஆர்டர் கையில் கிடைத்துவிடும்.

அடுத்ததாக மீனா பணத்தை எடுத்துட்டு போகும் போது சிந்தாமணிக்கு எப்படி தெரிந்தது, என்று யோசித்துப் பார்க்கும்போது விஜயாவும் இதில் மாட்டிக் கொள்வார். அந்த வகையில் விஜயா தான் வீட்டில் இருந்து கொண்டே சிந்தாமணிக்கு தகவலை சொல்லி இருக்கிறார் என்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்து விடும். ஆனாலும் இந்த அண்ணாமலை வழக்கம் போல் விஜயாவை எதுவும் சொல்லாமல் விட்டுவிடுவார்.

இவ்வளவு ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்பதற்கேற்ப ரோகிணி விஷயம் பெருசாக பேசப்படாமல் போய்விட்டது. அதாவது ரோகிணி கையும் களவுமாக மாட்டிய பொழுது அதைவிட மீனா மற்றும் முத்துவுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்து ரோகினியை எஸ்கேப் ஆக்கி விட்டார்கள். அதே மாதிரி தான் இப்பொழுதும் மீனா தொலைத்த பணத்தின் மூலம் ரோகிணி கதை என்ன ஆச்சு என்று தெரியாமலேயே கமுக்கம் ஆகிவிட்டது.