Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் கோபி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் இவருடைய ஆளு பாக்கியாவிற்கு நிச்சயதார்த்தம் இல்லை என்பது தெரிந்து போய்விட்டது. இதனால் பெருமூச்சு விட்டு என் ஆளுக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை என்று தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய சந்தோசம் அப்பட்டமாக தெரிந்த நிலையில் ராதிகா என்னாச்சு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி என்று கேட்கிறார். அதாவது இவ்வளவு நாளாக பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் தான் கல்யாணம் நடக்கப்போகிறது. அதற்காக நிச்சயதார்த்தம் வரை சென்று விட்டார்கள் என்று தவறாக புரிந்து கொண்டிருந்த கோபிக்கு தற்போது உண்மை தெரிந்து விட்டது.
இதற்காக நேரடியாக பழனிச்சாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நியாயம் கேட்ட கோபி, வீட்டிற்கு வந்து இவருடைய அம்மாவிடமும் இதெல்லாம் சரியா அம்மா. நீயும் இதற்கு துணை போகிறாய் என்று கேள்வி கேட்க அதற்கு இதில் என்ன தப்பு என்று சொல்லி பழனிச்சாமிக்கும் அப்பாவின் சொந்தக்காரர் பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம் தான் நடந்தது என்பதை தெரியப்படுத்தி விடுகிறார்.
இதன் பிறகு தான் இவருக்கு நிம்மதியை வந்தது போல் துள்ளி குதித்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார். இவருடைய நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கும் போது என்னமோ இவர் மனசார காதலித்த பெண்ணை வேற ஒருத்தவன் கல்யாணம் பண்றது போல ஓவரா சீன் போட்டு கொண்டிருந்தார்.
தற்போது உண்மை தெரிந்த பிறகு என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என்று மமதையில் இருக்கிறார். அப்படி என்றால் பாக்கியா கோபிக்கு என்ன வேணும். அதாவது கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணும் ஒட்டக்கூடாது என்ற நிலைமை தான் தற்போது கோபி இருக்கிறார்.
அடுத்ததாக பாக்கியாவிற்கு, கோபி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பேசி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பின் அவருடைய வீட்டிற்கு போகிறார். அங்கே வழக்கம் போல் அவருடைய அம்மாவை பார்த்து பேசிய பின்பு பழனிச்சாமிடம் கோபி நடந்துக்கிட்ட விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறார். அத்துடன் பாக்கியாவின் மனதில் எப்பொழுதுமே பழனிச்சாமி ஒரு நல்ல தோழனாக தான் இடம் பிடித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.