மைனா நந்தினி வாங்கிய சம்பளம்.. இரவோடு இரவாக துரத்தினாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று இறுதி கட்டத்தை அடைய உள்ளது. அசீம், விக்ரமன், சிவின் ஆகியோர் ஃபைனலிஸ்டாக உள்ளனர். இந்த சூழலில் இன்று மாலை இவர்களுள் ஒருவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை அமெரிக்கா உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நான்காவது பைனலிஸ்காக இருந்த மைனா நந்தினி நேற்று இரவோடு இரவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்த நந்தினி அதன் பிறகு சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் இவரது மைனா கதாபாத்திரம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

அதிலிருந்து மைனா நந்தினி என்ற ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்குப் பிறகு மைனா நந்தினி என்டரி கொடுத்தார். ஆரம்பம் முதலில் நகைச்சுவையான விஷயங்களை மூலம் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார். ஆனால் இறுதி வரை மைனா பிக் பாஸில் இடம்பெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சின்னத்திரையில் அவருடைய ரசிகர்கள் காரணமாக இறுதிவரை காப்பாற்றப்பட்டார். தற்போது மைனா நந்தினி வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸில் 103 வது நாள் வரை மைனா நந்தினி பயணித்துள்ளார். மைனா நந்தினிக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து 7 நாட்கள் பிறகு தான் மைனா நந்தினி பங்கு பெற்றதால் 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியதற்காக அவருக்கு 24 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமுதவாணனுக்கு பதிலாக இவர் பணப்பெட்டியை எடுத்திருந்தால் கூடுதலாக 11 லட்சத்தி 75 ஆயிரம் கிடைத்திருக்கும்.

பணப்பெட்டி வாய்ப்பை மைனா நந்தினி தவறவிட்டது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் பிக் பாஸில் இவ்வளவு நாள் அவர் தாக்குப்பிடித்ததை நினைத்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →