நந்தாவுக்கும், ஆனந்திக்கும் நடக்க இருக்கும் திருமணம்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க யார் உண்மையான அழகன் என்பதை ஆனந்தி எப்போது தெரிந்து கொள்வாள் என்ற கான்செப்ட்டை வைத்து ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து அலற விட்டிருந்தார் இயக்குனர்.

இந்த வாரம் அதற்கும் ஒரு படி மேலான கான்செப்ட் தான். இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியலை பார்ப்பவர்கள் கையில் பிபி டேப்லெட் உடன் தான் உட்கார வேண்டும் போல. ஆனந்தியை உருவி உருகி காதலித்த அன்பு, நேரில் தன்னை தெரியப்படுத்திக் கொள்ளாமல் அழகன் என்ற கேரக்டர் மூலம் ஃபோனில் மட்டுமே பேசி வந்தான்.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மித்ரா அந்த அழகன் கேரக்டர் நான் தான் என நம்ப வைக்க நந்தாவை உள்ளே கொண்டு வந்தால். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மகேஷ் அவனுடைய அப்பா அம்மா கல்யாண நாள் கொண்டாட்டத்தின் போது ஆனந்தியை திருமணம் செய்து வைக்க கேட்க இருக்கிறான்.

நந்தாவுக்கும்,ஆனந்திக்கும் நடக்க இருக்கும் திருமணம்

தன்னுடைய திட்டத்தையும் மித்ராவிடம் சொல்லிவிட்டான். இதனால் பயங்கர கடுப்பில் இருக்கும் மித்ரா அந்த கல்யாண நாள் விழாவிற்கு முன்னாடியே மகேஷ் ஆனந்தியை வெறுப்பும் அளவிற்கு ஏதாவது நடந்தே ஆக வேண்டும் என நந்தாவுக்கு உத்தரவு போட்டு இருக்கிறாள்.

நந்தா அதற்கும் ஒரு படி மேலே போய் அந்த கல்யாண கொண்டாட்டம் வருவதற்கு முன்பே ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள பிளான் போட்டு விட்டான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நந்தா, மித்ராவிடம் அந்த கல்யாண நாள் பார்த்து வருவதற்குள் நான் ஆனந்தியை கல்யாணம் செய்து காட்டுகிறேன் என தன்னுடைய திட்டத்தை சொல்லிவிட்டான்.

அதற்கு ஏற்ற மாதிரி ஆனந்தியிடம் போய் நாம் இருவரும் மலைக்கோவிலில் உடனே திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்கிறான். ஆனந்தி வழக்கம் போல திருதிருவென முழித்துக் கொண்டு பதில் ஏதும் பேசாமல் நிற்கிறாள். இவர்கள் இருவரும் நின்று பேசுவதையும் அன்பு பார்த்து விடுகிறான்.

அதே நேரத்தில் நந்தாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் அருணை தேடி கம்பெனிக்கு யாரோ வருவது போலவும், அவனின் போட்டோவை அனுப்பிவிடம் காட்டி விசாரிப்பது போலவும் இன்றைய ப்ரோமோ முடிந்து இருக்கிறது. நந்தா யார் என்ற உண்மையை அன்பு கண்டுபிடிப்பானா, ஆனந்தி திருமணத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறாள் என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →