குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற நம்பர் ஒன் சீரியலின் இடத்தை பிடித்து வருகிறது எதிர்நீச்சல். எப்படியாவது குணசேகரனை தோற்கடிக்க வேண்டும் என்று ஜனனி ஒவ்வொரு முறையும் பேசும்போது ஏதாவது பண்ணுவார் என்று நினைத்தால் வெறும் வாயால் மட்டும் தான் முழம் போடுகிறார். காரியத்தில் ஒன்னும் இல்லை. குணசேகரன் நினைத்தபடி தான் இப்ப வரை கதை நகர்ந்து வருகிறது.

ஆனால் இதில் ஒரு திருப்தி என்றால் குணசேகரனை அவ்வப்போது ரேணுகா மற்றும் நந்தினி வார்த்தைகளால் தாக்கி அவரை நல்ல வச்சு செய்கிறார். இதை பார்ப்பதற்கு ஒரு ஆனந்தமாக இருக்கிறது. அத்துடன் குணசேகரன் ஏதாவது சொன்னால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக நந்தினி பேசுவது குணசேகரனுக்கு தெரியாமலேயே அவரை டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.

அடுத்ததாக வருகிற எபிசோடு படி அரசு அவருடைய தம்பியிடம் பேசி மனதை மாற்றி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க திட்டம் போட்டார். ஆனால் அருண் வெளிநாடு போகவில்லை. ஜனனி கஸ்டடியில் தான் இருக்கிறார். இவரிடம் ஜனனி வைத்து இருக்கும் பிளான் அனைத்தையும் சொல்கிறார். இதை கேட்ட அருண் எவ்வளவு பெரிய ரிஸ்கா தெரிகிறது. இதெல்லாம் சரியா வருமா என்று கேட்கிறார். அதற்கு ஜனனி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

இதை பார்க்கும் பொழுது குணசேகரனுக்கு ஏதோ பெரிய ஆப்பு தயாராகி இருக்கிறது என்று தெரிகிறது. ஆக மொத்தத்துல இன்னும் கொஞ்ச நாளா இந்த ஆதிரை அருண் திருமணத்தை வைத்து தான் ஓட்டப் போகிறார்கள் என்று முடிவாகி உள்ளது. ஆனாலும் இதற்கு ஒரு தீர்வு பேசாம அருணுக்கும் ஆதிரைக்கும் ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தால் யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது.

இதை விட்டு போட்டு ஏன் தலைய சுத்தி மூக்க தொட்றாங்க என்று தெரியவில்லை. எது எப்படியோ கூடிய சீக்கிரத்துல இவர்களுடைய திருமணத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு சீக்கிரம் வாங்க என்று தோன்றுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜனனி உடைய முக்கியமான வேலையை அவர் மறந்து விட்டார். எப்பயாவது ஒருமுறை மட்டும் தான் அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் இவருக்கு ஞாபகம் வருகிறது.

ஜீவானந்தம் யார் என்று மட்டும் கண்டுபிடித்து வந்தால் அதுவே குணசேகரனுக்கு பெரிய ஆப்பு தான். ஏனென்றால் அந்த 40% சொத்து நமக்கு வந்துவிட்டது என்ற திமிரில்தான் இவ்வளவு ஆட்டம் ஆடுகிறார். அது இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் அடங்குவார் அதன் பிறகு ஈசியாக ஆதிரையின் திருமணத்தை நடத்தலாம். குணசேகருக்கும் பெரிய பதிலடி கொடுத்த மாதிரி இருக்கும்.