மகாநதி சீரியலில் யமுனாவிடம் சண்டை போடும் நவீன்.. விஜய்க்காக வெண்ணிலாவிடம் பேசும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரிக்கு மற்றவர்களால் வரும் பிரச்சனையை விட இந்த யமுனாவால் வரும் சோதனைகள் தான் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட யமுனாவுக்கு உதவி பண்ணும் விதமாக எந்த தவறுமே செய்யாமல் இருந்த நவீனுக்கு யமுனாவை கல்யாணம் பண்ணி வைத்து விஜய் மற்றும் காவிரி பெரிய தவறு செய்து விட்டார்கள்.

தற்போது அந்த தவறுக்கு தண்டனையாக தான் காவிரி மற்றும் விஜயும் அவஸ்தை பட்டு வருகிறார்கள். விஜய் இருக்கும் இடம் காவேரி மற்றும் நவீனுக்கு மட்டுமே தெரிந்தது. ஆனால் நவீன், யமுனாவிடம் உளறியதால் இதை வைத்து போலீஸிடம் யமுனா தகவலை கொடுத்து விடுகிறார். அதன்படி போலீஸ், விஜயை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் விட்டார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவிரி எப்படி போலீசுக்கு விஜய் இருந்த இடம் தெரிந்தது என்று குழப்பம் ஆகிவிட்டது. உடனே நவீன் மீது வந்த சந்தேகத்தின்படி காவிரி பேசினார். ஆனால் அதன் பிறகு தான் காவிரிக்கு தெரிந்தது இது எல்லாம் யமுனா செய்த காரியம் என்று. பிறகு யமுனாவை அடித்து துவம்சம் பண்ணும் விதமாக காவிரி மொத்த கோபத்தையும் காட்டிவிட்டார்.

இவர்களுடைய சண்டையை கங்கா தான் தடுத்து நிறுத்தி யமுனாவை வெளியே அனுப்பி காவிரிக்கு ஆறுதலாக இருந்தார். அதன் பிறகு குமரனுக்கும் நடந்த விஷயத்தை கங்கா சொல்லிவிடுகிறார். அடுத்ததாக விஜயை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்றால் வெண்ணிலா கண் விழித்து உண்மையை சொன்னால் மட்டும்தான் நடக்கும் என்பது காவிரிக்கு தெரிந்து விட்டது.

அதனால் ஹாஸ்பிடல்லில் இருக்கும் வெண்ணிலாவை சந்தித்து பேசுவதற்கு காவிரி போய்விட்டார். போனதும் மயக்கத்தில் இருக்கும் வெண்ணிலாவிடம் காவிரி, கெஞ்சி விஜய் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்ல எழுப்புகிறார். அடுத்ததாக குமரன் வந்து நவீன் இடம் விஜய் இருக்கும் இடத்தை போலீஸிடம் சொன்னது யமுனா தான் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே கோபப்பட்ட நவீன் வீட்டிற்கு போய் யமுனாவிடம் சண்டை போடுகிறார். ஆனால் யமுனா எதற்கும் அஞ்சாமல் திமிராக நவீன் இடம் நடந்து கொள்கிறார். இந்த மாதிரி கேரக்டருடன் இருக்கும் யமுனாவை விட்டுவிட்டு தனியாக வாழ்ந்தால் தான் நவீனுக்கு நிம்மதி கிடைக்கும்.