Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் காவேரி ஒன்று சேர்வதற்கு தற்போது ஒரு பொக்கிஷமாக அவர்களுக்கு கிடைத்த விஷயம் குழந்தை. அதாவது காவிரி கர்ப்பம் என்ற விஷயம் தெரிந்தவுடன் குடும்பத்துடன் சொல்ல முடியவில்லை என்று ஃபீல் பண்ணி விஜய் இடம் சொல்லி அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம் என்று ஆசைப்பட்டார்.
அதனால் விஜய் இடம் சொல்வதற்கு நிறைய இடத்தில் முயற்சி செய்தார். ஆனால் சந்தர்ப்பம் எதுவும் அமையாததால் விஜய்க்கு போன் பண்ணி கோவிலில் நான் காத்துக் கொண்டிருப்பேன். நீங்கள் வந்து விடுங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
விஜய்யும் காவிரியை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் இருந்த பொழுது பாட்டியிடம் இருந்து வெண்ணிலா உன்னை கேட்டு பிரச்சினை பண்ணுகிறார் என்று சொல்லி வீட்டிற்கு வரவழைத்து விட்டார். அங்கே போனதும் எப்படியாவது தனக்கு கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் வெண்ணிலாவிடம் எனக்கும் காவிரிக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியான வெண்ணிலா, காவிரியை பார்த்து பேச வேண்டும் என்று சொல்லியதால் விஜய், வெண்ணிலவை கூட்டிட்டு கோவிலுக்கு போகிறார். ஆனால் அதற்குள் கோவில் நடை சாத்தியதால் விஜய் வரும்வரை வாசலில் காவேரி காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே வந்த நவீன், காவிரி கொஞ்சம் சோர்வாக இருப்பதை பார்த்து பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே இப்பொழுது காவிரியிடம் அக்கறை காட்டி பேசுகிறார். உடனே காவிரி கர்ப்பம் என்ற விஷயத்தை நவீனிடம் முதலில் சொல்லி விடுகிறார். நவீனும் சந்தோஷப்பட்டு இந்த ஒரு விஷயம் போதும் நீயும் விஜய்யும் ஒன்று சேர்வதற்கு. நான் உன்னை கூட்டிட்டு போகிறேன் என்று காவிரியை கூப்பிடுகிறார். அதற்கு காவேரி, வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்து விட்டது.
விஜய் எங்களுக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றி சொல்லி வெண்ணிலாவுக்கு புரிய வைத்த பிறகு தான் நாங்கள் ஒன்று சேர முடியும் என்று சொல்லி நவீனை அமைதியாக உட்கார வைத்து விடுகிறார். அந்த வகையில் இப்போதைக்கு காவிரி கர்ப்பமான விஷயம் நவீனைத் தவிர வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. அதனால் நவீன் தான், காவிரிக்கு எல்லா உதவிகளையும் செய்து கூடவே இருக்கப் போகிறார்.
377dt5