பிக்பாஸில் கோவா கூட்டம், ஜூனியர் நிக்சனுக்கு கொண்டாட்டம்.. ஜாக்குலின் இப்போ கம்ஃபர்டபிளாக இருக்கா?

Bigg Boss 8: வெளியில் நல்ல பெயர் இருப்பவர்கள் கூட பிக் பாஸில் கலந்து கொண்டால் டேமேஜ் ஆகி விடுவார்கள்.

இது தெரிந்து இருந்தும் தொடர்ந்து எட்டு சீசனுக்கும் ஆட்கள் பஞ்சமில்லாமல் உள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. இரண்டு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவுக்கு மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

போன சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா இடத்தை இப்போ ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா பிடித்து இருக்கிறார்கள்.

அவர்கள் இரண்டு பேர் விளையாடியதில் ஆவது காரசூரம் இருந்தது. இவர்கள் இரண்டு பேரும் புஸ்வானம் போல் அப்பப்ப பொங்கி விட்டு அமைதியாகி விடுகிறார்கள்.

ஜாக்குலின் இப்போ கம்ஃபர்டபிளாக இருக்கா?

ஏற்கனவே இந்த கோவா கேங் மேல் ரசிகர்களுக்கு ஒரு வெறுப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டத்தின் தலைவி ஜாக்குலின் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது.

இந்த வீடியோவில் ஜெஃப்ரி பெட்டில் போர்வை மூடிக்கொண்டு படுத்து இருக்கிறார். ரஞ்சித் சேரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜாக்குலின் பெட்ரூமுக்கு வந்து ஜெஃப்ரியின் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவர் மீது காலை போடுகிறார்.

BB8 Tamil
BB8 Tamil

மீண்டும் அவர் மீது காலை போட்டு கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து அவர் ரஞ்சித்திடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

BB8 Tamil
BB8 Tamil

என்னதான் அக்கா தம்பியாக இருந்தாலும் இப்படி செய்வாங்களா. நிஜமான அக்கா தம்பி கூட ஒரு வயதுக்கு மேல் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பேச மாட்டார்கள்.

இதையெல்லாம் வெளியில் சொல்லப் போனால் உங்கள் பார்வையில் தப்பிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த புதிதில் இதே ஜாக்குலின் தான் ஜெஃப்ரி பெண்கள் பெட்ரூமில் தவறாக பார்க்கிறார்,
எங்களுக்கு அன்கம்ஃபர்டபிளாக இருக்கிறது என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment