பல்லவனுக்கு அம்மாவாக முடிவெடுக்கும் நிலா.. டைவர்ஸ் பண்ண சொன்ன சோழனின் தம்பி

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாக்கும் சோழனுக்கும் கல்யாணம் நடந்தது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் என்று பல்லவன் பாண்டியனுக்கு தெரிந்து விட்டது. இதனால் அதிக அளவில் நொறுங்கிப் போனது பல்லவன் தான். அண்ணி மேல பாசத்தை வைத்து நிலா வந்ததுக்கு பிறகு தான் எங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள் என்பதற்கு ஏற்ப தான் சூழ்நிலை மாறி இருந்தது.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக சோழனை விவாகரத்து பண்ணிவிட்டு நிலா வீட்டை விட்டு போவதை தெரிந்ததும் எல்லோரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். அந்த வகையில் உண்மை தெரிந்த பிறகு சேரன் அண்ணனை பற்றி தப்பாக நினைத்து நோகடித்து விட்டோமே என்று பாண்டியன் பீல் பண்ணுகிறார். உடனே சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு செண்டிமெண்டாக பேசி அண்ணன் தம்பி பாசத்தை நிலாவிற்கு புரிய வைத்து விட்டார்கள்.

அடுத்ததாக சோழன் வீட்டிற்கு வந்ததும் நான் செய்தது தவறுதான், அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய காதல் பொய் இல்லை நான் உண்மையிலேயே நிலாவே காதலித்தேன். இப்பொழுதும் அவள் தான் என்னுடைய மனைவி என்ற ஆசையில் நான் இருக்கிறேன் என தம்பிகளிடமும் சேரனிடமும் சொல்கிறார்.

அப்பொழுது நிலாவுக்கு அண்ணி போன் பண்ணி அந்த குடும்பத்தில் இருந்து கிளம்பி வெளியே போ என்று சொல்கிறார். எப்படித்தான் அஞ்சு பேர் இருக்க வீட்ல நீ தனியாக இருக்கிறாயோ எனக்கு தெரியவில்லை என பயமுறுத்தும் அளவிற்கு பேசுகிறார். உடனே நிலா, எனக்கு நம்ம வீட்டில் இருக்கும் சுதந்திரம் சந்தோஷத்தை விட இந்த வீட்டில் அதிகமாகவே கிடைக்கிறது.

சும்மா எல்லாத்துக்கும் எனக்கு கிளாஸ் எடுக்காதீங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபத்தில் போனை கட் பண்ணி விடுகிறார். அடுத்ததாக நடேசனுக்கு இந்த உண்மை தெரிந்த நிலையில் பொய்யாக நடந்த கல்யாணத்திற்கு போட்டோ எதற்கு என்று கல்யாண போட்டோவை கழட்டி விடுகிறார். இதெல்லாம் பார்த்து பல்லவன் அழ ஆரம்பித்த நிலையில் நிலா அவனிடம் சமாதானமாக பேசுகிறார்.

அப்பொழுது பல்லவன் நீங்கள் சோழன் அண்ணாவை விட டைவர்ஸ் பண்ணி விடுங்கள். ஆனால் இந்த வீட்டிலேயே இருங்க என்று ஒரு குழந்தை போல் நிலாவிடம் அழுது பீல் பண்ணி கேட்கிறார். இதை பார்த்த சேரனும் இந்த வீட்டு பெண்ணாக நீ இருந்து உன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் பண்ணுமா நாங்க எல்லோரும் உனக்கு சப்போர்ட்டாக இருக்கும் என்று நிலாவிடம் சொல்கிறார்.

அந்த வகையில் இவர்களுடைய அன்பை மீறி நிலா நிச்சயம் போக மாட்டார். அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் பல்லவனுக்கு அம்மாவாகவும் நிலா சப்போர்ட் செய்து சந்தோஷத்தை கொண்டு வருவார்.