Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ஊர் ஜனங்கள் முன்னாடி தினம் தினம் அசிங்கப்பட்டு வரும் சேரன் குடும்பத்திற்கு நிலா வந்த பிறகுதான் விடிவுகாலம் பிறக்கப் போகிறது. அதற்கு முதல் அச்சாணியாக எந்தவித தப்பும் செய்யாமல் லாக்கப்பில் இருக்கும் சேரன் சோழன் பாண்டியன் பல்லவனை காப்பாற்றும் விதமாக நிலா அதிரடியாக ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார்.
அதாவது சேரன் மீது பொய்யான புகாரை கொடுத்த கார்த்திகா குடும்பத்தில் இருப்பவர்கள் சொன்னது உண்மை இல்லை என்று நிலாவிற்கு தெரியும். இவர்களை காப்பாற்றும் விதமாக நிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி போலீஸ் இடம் வாதாடுகிறார். ஆனால் போலீஸ் இது பெண்கள் சம்பந்தப்பட்ட புகார் என்பதால் அந்தப் பெண் வந்து வாக்குமூலம் கொடுப்பதை வைத்து தான் எதனாலும் பண்ண முடியும் என்று சொல்லிவிடுகிறார்.
உடனே நிலா அப்படி என்றால் அந்த பெண்ணை நீங்கள் விசாரிக்க வேண்டும் என்று கார்த்திகா வீட்டிற்கு போலீசை கூட்டிட்டு போகிறார். அங்கே கார்த்திகாவின் அப்பா வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் கார்த்திகாவிற்கு வேறு ஒருவருடன் கல்யாணத்தை பண்ணி வைப்பதற்காக மாப்பிள்ளை பார்ப்பதற்கு தயாராகி விட்டார்.
அந்த சமயத்தில் நிலா, போலீசை கூட்டிட்டு கார்த்திகா வீட்டிற்கு வருகிறார். விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் அம்மா, கார்த்திகாவிடம் நாங்கள் சொல்றபடி தான் போலீஸிடம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் என்னையும் உங்க அப்பாவையும் உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டி கூட்டிட்டு வருகிறார்.
இதனால் கார்த்திகா போலீஸ் கேட்டதற்கு உண்மையை சொல்வாரா அல்லது அம்மா மிரட்டியதால் அம்மா சொன்னது தான் உண்மை என்று பொய் சொல்வாரா என கேள்வி குறியாக இருக்கிறது. ஆனால் இந்த முறை மட்டும் கார்த்திகா சேரனுக்கு சப்போர்ட்டாக உண்மையை சொல்லவில்லை என்றால் இந்த மாதிரி ஒரு கேரக்டர் சேரன் குடும்பத்திற்கு தேவையே இல்லை என்று நிலா முடிவு எடுத்து விடுவார்.
ஆனால் கார்த்திகா இதுதான் சான்ஸ் என்று சேரனுக்கு சப்போர்ட் பண்ணி அண்ணன் தம்பிகளை வெளியே கூட்டிட்டு வந்து விடுவார். அதன் பிறகு நிலா, சேரன் மற்றும் கார்த்திகாவை சேர்த்து வைக்கும் பொறுப்பில் கல்யாணத்தை நடத்தி வைப்பார்.