Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவை இந்த வீட்டிலேயே இருக்க வைப்பதற்காகவும் தன்னுடைய மனைவியாக மாற வேண்டும் என்பதற்காக சோழன், நிலாவுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சோழன் அவருடைய நண்பரிடம் சொல்லி ஒரு இன்டர்வியூவை ஏற்பாடு பண்ணி இருந்தார். நிலாவும் அந்த இன்டர்வியூவை நம்பி ஆபீசுக்கு சோழனை கூட்டிட்டு கிளம்பி போய் விட்டார்.
அப்படி போன பொழுது வாசலில் நின்று கொண்டு சோழன் அவருடைய நண்பருக்கு போன் பண்ணுகிறார். அதற்கு சோழனின் நண்பர் இன்னைக்கு என்னால் எதுவும் பண்ண முடியாது. எங்க அப்பா திடீரென்று ஆஃபீஸ்க்கு வந்து விட்டார். அதனால் தேவை இல்லாமல் நிலாவை அனுப்பி பிரச்சினைக்குள் மாட்டி விடாதே என்று சொல்லி விடுகிறார்.
சோழனுக்கு வேற வழி எதுவும் இல்லாததால் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருக்கும் நிலாவிடம் திடீரென்று இன்டர்வியூ தேதியை மாற்றி வைத்து விட்டார்கள். இன்னைக்கு இன்டர்வியூ போக வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ஏமாந்த நிலா, இன்னொரு நாள் இன்டர்வியூ இருக்கும்பொழுது நிச்சயம் சொல்லு என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு நடந்த விஷயத்தை சேரன் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று சோழன் சொல்கிறார். அதற்கு சேரன், சோழனை பார்த்து நீ பொய்க்கு மேல பொய் சொல்லிக்கொண்டு அந்த பெண்ணை ஏமாற்றுகிறாய். இந்த விஷயம் எல்லாம் அந்தப் பெண்ணுக்கு தெரிந்து விட்டால் தேவையில்லாத பிரச்சினை உனக்கு வந்து விடும். பிறகு வீட்டை விட்டு அந்த பொண்ணு போய்விடும் என்று சொல்கிறார்.
ஆனால் சோழன் எதுவும் கேட்காமல் உண்மை தெரிந்தால் தான் அந்த பொண்ணு வீட்டை விட்டு போய்விடும். எந்த பிரச்சினையும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சேரன் பேச்சை கேட்காமல் மறுபடியும் நிலா விடம் பொய் சொல்லி சமாளிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நிச்சயம் சேரன் மனசு கேட்காமல் நிலாவே பார்த்து எல்லா உண்மையும் சொல்லிவிடுவார். அதன் பிறகு நிலா எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.