Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், ஜெயிலில் இருக்கும் சேரன் சோழன் பாண்டியன் பல்லவனை வெளியில் எடுக்கும் பொறுப்பில் நிலா, போலீஸிடம் போராடுகிறார். அந்த வகையில் கார்த்திகாவை நேரில் வந்து விசாரித்து பார்த்து முடிவு பண்ணுங்கள். ஒருத்தர் கம்ப்ளைன்ட் கொடுத்ததை வைத்து நீங்கள் எப்படி இவர்கள் மீது கேஸ் போடலாம் என்று கேள்வி கேட்கிறார்.
அதன்படி போலீசும் நிலாவும் கார்த்திகாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். உடனே கார்த்திகாவின் அம்மா, அப்பா மற்றும் மாமா மூன்று பேரும் சேர்ந்து கார்த்திகாவை பார்த்து பேசாத அளவிற்கு போலீஸ் இடம் மல்லுக்கட்டுகிறார்கள். ஆனால் நிலா, கார்த்திகா போன் பேசும் பொழுது ரெக்கார்ட் பண்ண வீடியோவை போட்டு காட்டுகிறார்.
உடனே போலீஸ் காரராக கார்த்திகா இப்பொழுது இங்கே வந்து என்னிடம் பேச வேண்டும் அப்பொழுது தான் என்னால் அடுத்த விஷயத்தை பண்ண முடியும் என்று சொல்கிறார். பின்பு கார்த்திகாவின் அம்மா, கார்த்திகாவை கூட்டிட்டு வரும்போது மிரட்டி கூட்டிட்டு போலீஸ் முன்னாடி நிப்பாட்டுகிறார். அப்பொழுது போலீஸ் சேரன், உன்னிடம் தப்பாக நடந்து கொண்டாரா என்று கேட்கிறார்.
ஆனால் அதற்கு கார்த்திகா அப்படிலாம் எதுவும் இல்லை, நான் தான் சேரன் மாமாவை தேடி போய் பார்த்து பேசினேன். சேரன் மாமா என்னை எதுவுமே பண்ணவில்லை. இவர்கள் கொடுத்த கம்பளைண்ட் எல்லாமே பொய் என்று உண்மையை சொல்லி அவர்களை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்து விடுகிறார். பிறகு நிலா எடுத்த முயற்சிக்கு போலீஸ் நன்றி சொல்லிய நிலையில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் நிலாவிற்கு நன்றி சொல்லி விட்டார்கள்.
அடுத்ததாக நிலா, அவருடைய அண்ணியை சந்தித்து பேசுகிறார். அண்ணிக்கு ஏற்கனவே நிலா கழுத்தில் சோழன் கட்டிய தாலி சும்மாதான் என்று தெரியும். இரண்டு பேரும் விரும்பி கல்யாணம் பண்ணவில்லை என்பதால் அண்ணி, நிலாவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். அதாவது உங்களைப் பொறுத்தவரை வேணா இந்த கல்யாணம் பொம்மை கல்யாணமாக இருக்கலாம். ஆனால் சட்டத்திற்கும் ஊர்காரங்களுக்கும் நீங்கள் ரெண்டு பேரும் கணவன் மனைவியாக தான் தெரிவீர்கள்.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் சட்டபூர்வமாக நீங்கள் இரண்டு பேரும் பிரிய வேண்டும். அதற்கு விவாகரத்து கேட்டால் மட்டும் தான் எல்லா பிரச்சினையும் சுமுகமாக முடியும் என்று சொல்கிறார். உடனே நிலாவுக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதால் சோழனை கூட்டிட்டு விவாகரத்து பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.