Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா சேரனுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தில் மும்மரமாக இருக்கிறார். அதனால் மேட்ரிமோனி மூலம் இன்னொரு பொண்ணே பார்த்து விட்டார். அந்த பெண்ணை பார்த்து பேசுவதற்காக அனைவரும் காபி ஷாப்புக்கு போகிறார்கள். ஆனால் அந்த பொண்ணு பாய் பெஸ்டியை கூட்டிட்டு சேரனை பார்த்து பேசுகிறார்.
அப்பொழுது சேரனின் பேச்சும் செயல்களும் பார்த்து கிண்டல் அடிக்கும் விதமாக அந்த பெண் ரொம்பவே சேரனை நோஸ்கட் பண்ணிவிட்டது. இதையெல்லாம் பார்த்த நிலாவுக்கும் அந்தப் பெண் சரிப்பட்டு வராது என்று முடிவு பண்ணி விட்டார். பிறகு வீட்டிற்கு அனைவரும் வந்த நிலையில் சேரன் சமைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே கார்த்திகா வந்து பேசுகிறார்
இதனால் நடேசன் கோபப்பட்டு நீ இந்த வீட்டிற்கு வரக்கூடாது. நீ ஏதாவது பண்ணிட்டு போகிறாய் உன் குடும்பத்தில் இருப்பவர்கள் வந்து பிரச்சினை பண்ணுவதற்கு நாங்களா கிடைத்தோம். இனியும் இந்த வீட்டுக்கு வந்தாய் என்றால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார்.
இதை எல்லாம் பார்த்த நிலா, சேரனுக்கு வேற எங்க பொண்ணு தேடினாலும் கார்த்திகா மாதிரி கிடைக்காது என்று தெரிந்து விட்டது. அதனால் சோழனை தனியாக கூட்டிட்டு பேசுவதற்கு போகிறார். அப்படி பேசும் பொழுது கார்த்திகாக்கும் சேரனுக்கும் நாம் இரண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறார்.
அந்த வகையில் கோவிலுக்கு வந்த கார்த்திகாவிடம் நிலா, திருட்டு கல்யாணத்தை பற்றி பேசுகிறார். கார்த்திகாவும் அந்த கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் நான் நாளைக்கு இந்த கோவிலுக்கு 10 மணிக்கு வந்து விடுகிறேன் என்று கார்த்திகா சொல்கிறார். உடனே நிலாவும், நானும் சேரன் அண்ணாவை பத்து மணிக்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன்.
பிறகு உங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்துகிறோம் என்று சொல்கிறார். அந்த மாதிரி கல்யாணம் ஏற்பாடு பண்ணுகிறது என்று தெரிந்தாலே கார்த்திகா விட்டுக் குடும்பம் பிரச்சினை பண்ணி நடேசன் குடும்பத்தை அவமானப்படுத்தி விடுவார்கள். ஆனாலும் எல்லா எதிர்ப்பையும் தாண்டி இந்த முறை சேரன் மற்றும் கார்த்திகாவின் கல்யாணம் நடந்து விடும்.