Ayyanar Thuanai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா தனியாக போகக்கூடாது என்ற அக்கறையில் சோழனின் அப்பா நடேசன் கூட போனார். ஆனால் நடேசன் வந்தது நிலாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மருமகளை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
நிலா காலேஜுக்கு சர்டிபிகேட் வாங்க வந்திருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட நிலாவின் அண்ணன் அங்கே வந்து பிரச்சினை பண்ணி நிலா வாங்கி வைத்த விவரங்களை கிழித்து விடுகிறார். அத்துடன் நிலாவை தன்னுடன் கூட்டிட்டு போகலாம் என்று நினைத்த அண்ணன் நிலாவே அடித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த நடேசன் என் மருமகள் மீது நீ எப்படி கை வைப்பாய் என்று கோபத்தை காட்டி விட்டார்.
உடனே நிலாவின் அண்ணன், கத்தியால் நடேசனை குத்த போகிறார். ஆனால் நடேசன் அந்த கத்தியை கையால் பிடித்து உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொண்டார். பிறகு நிலா, நடேசன் கையில் வரும் ரத்தத்தை பார்த்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகிறார். அங்கே இவர் யார் என்று நிலாவிடம் கேட்ட பொழுது என்னுடைய மாமனார் என்று சொல்லி பொறுப்பான மருமகளாக நிலா நடந்து கொண்டார்.
பிறகு நடேசனுக்கு ட்ரீட்மென்ட் முடிந்தவுடன் நிலா, மாமனாரை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். வந்ததும் காலேஜில் நடந்த பிரச்சினையும் அதனால் மாமனாருக்கு ஏற்பட்ட காயத்தையும் எல்லோரிடமும் சொல்கிறார். அந்த வகையில் நிலா இதுவரை மாமனாரை பார்த்து பயந்து வந்தார்.
ஆனால் தற்போது மாமனாரை புரிந்து கொண்ட நிலா நிச்சியம் நடேசனுக்கு ஒரு மருமகளாகவும் மாறிவிடுவார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் இருப்பவர்களை புரிந்து கொண்டு சோழனின் மனைவியாகவும் வாழ ஆரம்பித்து விடுவார்.