சோழன் குடும்பத்தை கூட்டிட்டு பொண்ணு பார்க்க போன நிலா.. சேரனுக்கு கார்த்திகாவுடன் நடக்கும் கல்யாணம்

Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தில் நிலா தீவிரமாக இறங்கி விட்டார். அதனால் மேட்ரிமோனி மூலம் ஒரு வரன் கிடைத்து இருக்கிறது. அதன் மூலம் எப்படியாவது சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா, நடேஷனை வைத்து பிளான் பண்ணுகிறார்.

அந்த வகையில் பொறுப்பான அப்பாவாக எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன மாதிரி பேச வேண்டும் என்று வீட்டில் வைத்து நிலா ட்ரைனிங் கொடுக்கிறார். அதன்படி நடேசனும் மாப்பிள்ளை வீட்டில் பேசி பொண்ணு பார்ப்பதற்கு தயாராகி விட்டார்கள். இதற்கு இடையில் நிலா வாயிலிருந்து இந்த வீட்டு மருமகள், சோழனின் மனைவி என்று சொல்லிவிட்டார்.

இதை கேட்ட சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டு தம்பிகளிடம் பெருமிதமாக பேசுகிறார். மேலும் எல்லோரும் கிளம்பி சேரனை கூட்டிட்டு பொண்ணு பார்க்கும் வீட்டிற்கு போய்விட்டார்கள். அங்கே போனதும் நிலா எல்லா விஷயத்தையும் எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கிய நிலையில் பெண்ணின் அப்பா என்னுடைய மகளும் சேரனும் தனியாக பேசிட்டு வரவேண்டும் என்று சொல்கிறார்.

நிலாவும் சரி என்று சொல்லி சேரனை அனுப்பி வைக்கிறார். ஆனால் நிலா ஆசைப்பட்ட மாதிரி இந்த கல்யாணம் நடக்கப் போவதில்லை. சேரனுக்கு கார்த்திகா தான் பிடித்திருக்கிறது, கார்த்திகாவுக்கும் சேரன் தான் பிடித்திருக்கிறது என்பதால் கடைசியில் நிலாவே இவர்களுடைய கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்க போகிறார்.