அய்யனார் துணை சீரியலில் குடும்பத்தை தூக்கி எறிந்த நிலா.. சோழன் வீட்டிலேயே ஐக்கியமாகும் மருமகள்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவை எப்படியாவது வீட்டிற்கு வரவழைத்து தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்ட நிலாவின் அப்பாவுக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றம்தான். அதாவது தன்னுடைய சர்டிபிகேட் கிடைத்துவிட்டால் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நிலா இருந்த பொழுது அவருடைய அம்மா போன் பண்ணி வீட்டுக்கு வர வைக்கிறார்.

அதனால் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்து விடுகிறேன் என்று சோழன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு பாண்டியனை மட்டும் கூட்டிட்டு நிலா அவருடைய வீட்டிற்கு போகிறார். அப்படி போன பொழுது நிலாவின் அம்மா அப்பா மற்றும் அண்ணன் அனைவரும் நிலாவை எப்படியாவது சமாதானப்படுத்தி தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி சமரசம் செய்ய பார்க்கிறார்கள்.

ஆனால் நிலா சொன்னது தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையை வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். அது வேண்டாம் என்று நான் எவ்வளவு சொல்லியும் நீங்கள் காது கொடுத்து கூட கேட்கவில்லை. எல்லாத்துக்கும் காரணம் உங்களுடைய கௌரவம் பணத்தின் மீது இருந்த ஆசைதான். அதனால் உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. என்னுடைய சர்டிபிகேட் மட்டும் எனக்கு கொடுத்து விடுங்கள்.

அதை வைத்துவிட்டு நான் என்னுடைய வாழ்க்கையை தேடி போய் விடுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட நிலாவின் அப்பாவுக்கு கோபம் வந்ததால் நிலாவின் சர்டிபிகேட் அனைத்தையும் எரித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த நிலா ஆத்திரமடைந்து நான் நல்ல கம்பெனியில் சேர்ந்து உங்களுக்கு இணையாக வளர்ந்து காட்டுவேன் என்று சவால் விட்டு போய்விடுகிறார்.

அந்த வகையில் பாண்டியனுடன் வீட்டுக்கு கிளம்பிய நிலா சோழன் வீட்டிற்கு சென்று மறுபடியும் அதே வீட்டில் வாழ்ந்து அந்த குடும்பத்தின் மருமகளாக ஐக்கியமான பிறகு அந்த வீட்டிற்காகவும் அவருடைய சந்தோஷத்திற்காகவும் நிச்சயம் ஏதாவது ஒரு வேலை தேடி நல்லபடியாக வழிநடத்தி வருவார். அதன் பிறகு தான் சோழனுக்கும் நிலாக்கும் உண்மையான காதல் மலர்ந்து இரண்டு பேரும் சேர்வார்கள்.