1000 எபிசோடை கடந்த விஜய் டிவி சீரியல்.. இறந்த நடிகைக்கு செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

விஜய் டிவியில் பிரபலமான சீரியல் ஒன்று 1000 எபிசோடுகளை தொட்டிருக்கிறது. இதை விஜய் டிவி சேனல் மற்றும் அந்த சீரியல் குழு படு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இந்த சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

பொதுவாக மற்ற சேனல்களின் சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும். அதற்கு காரணம் அந்த சீரியலில் நடிக்கும் கேரக்டர்களாக தான் இருக்கும். மேலும் ஒரு சீரியலை விஜய் டிவி எப்படியாவது மக்களிடையே கொண்டு சென்று விடுவார்கள்.

அந்த வகையில் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் விஜய் டிவி சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். வழக்கமாக சினிமாவில் பார்த்த அண்ணன் தம்பி கதை என்றாலும் ரசிகர்களால் இந்த நாடகம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தனம், மூர்த்தி, ஜீவா, மீனா, முல்லை, கதிர், கண்ணன் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

பாண்டியன் ஸ்டோர்ஸை ஆரம்ப நாட்களில் ரசிகர்கள் அதிகமாக பார்த்ததற்கு முக்கியமான காரணம் என்றால் அது கதிர்-முல்லைக்காக தான். கதிர் கேரக்டரில் குமரனும் முல்லை கேரக்டரில் மறைந்த நடிகை சித்ராவும் நடித்தனர். இந்த ஜோடிக்காகவே இளசுகளில் இருந்து பெருசுகள் வரை இந்த சீரியலுக்கு அடிமையாக இருந்தனர்.

VJ சித்ராவுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இவருக்கென சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேஜ்கள் அதிகம். அதில் இந்த சீரியல் காட்சிகளை மீண்டும் மீண்டும் ஷேர் செய்து இந்த சீரியலை மக்களிடையே கொண்டு சேர்த்தனர் என்றே சொல்லலாம். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு சித்ரா யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

சித்ராவுக்கு பின் காவ்யா முல்லை கேரக்டர் ஏற்ற நடித்த போது பல நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் இப்போது இந்த சீரியல் 1000 எபிசோடை கடந்து இருக்கிறது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் விஜய் டிவி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு சித்ராவை நினைவு கூர்ந்து அவருடைய புகைப்படத்தை வைத்து, அவருடனான நாட்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →