புத்திசாலித்தனமாக செழியனை காப்பாற்றிய பாக்கியா.. சைடு கேப்பில் ஸ்கோர் பண்ண போகும் சுதாகர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அமைச்சர் வீட்டுக்கு வந்து சமையல் பண்ணும் பாக்யா இதன் மூலம் எப்படியாவது செழியினை வெளியே கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் பாக்யாவிற்கு உதவியாக பெருமாளும் சப்போர்ட் செய்கிறார்.

ஆனால் இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற லோக்கல் கவுன்சிலர், பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது பிரச்சினை பண்ணுகிறார். என்னை பற்றி எதையாவது அமைச்சரிடம் போட்டுக் கொடுக்கணும் என்று நினைத்தால் எப்படி உன் பையனை ஜெயிலுக்குள் அனுப்பினேனோ, அதே மாதிரி உன்னையும் காலி பண்ணி விடுவேன் என்று மிரட்டி விட்டார்.

அடுத்ததாக பாக்கியா சமையல் முடித்துவிட்டு அமைச்சருக்கு பரிமாறுவதற்கு தயாராகிவிட்டார். ஆனால் லோக்கல் கவுன்சிலர், அமைச்சரை பார்க்க விடாமல் தடுத்து விடுகிறார். பிறகு பெருமாள், அமைச்சர் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு எப்படி இருக்கு என்று கேட்கிறார்.

அதற்கு அமைச்சர் நன்றாக இருக்கிறது என்று சொல்லிய நிலையில் பெருமாள் சாப்பாடு செய்த நபரை நீங்கள் பார்த்து பாராட்டினால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். ஆனால் லோக்கல் கவுன்சிலர் அதற்கெல்லாம் அமைச்சருக்கு நேரமில்லை என்று பாக்யாவை பார்த்து பேசுவதற்கு தடுத்து விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்த பாக்யா, அமைச்சருக்கு ஸ்வீட் கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்குள் போய்விடுகிறார். அப்படி போனதும் பாக்யாவும் அமைச்சரும் பேசிக் கொள்ளும் பொழுது லோக்கல் கவுன்சிலர் செய்த விஷயத்தை சொல்லி விடுகிறார். இதற்கு ஆதாரமாக பாக்கிய சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது லோக்கல் கவுன்சிலர் மிரட்டியதை செல்வி அக்கா வீடியோ எடுத்து விடுகிறார்.

அந்த வீடியோவை பார்த்த அமைச்சர் லோக்கல் கவுன்சிலரை திட்டி விட்டு இப்பொழுதே இவங்களுடைய பையன் வெளியே வரவேண்டும் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். அந்த வகையில் செழியனும் வெளியே வந்து விடுகிறார்.

இது தெரியாத ஈஸ்வரி, கோபி இடம் நீ எப்படியாவது பையனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடுகிறாய். ஆனால் பாக்கிய சமையல் ஆர்டரை எடுத்துக்கொண்டு சமைத்துக் கொண்டிருக்கிறார் என்று போட்டுக் கொடுக்கிறார். அது மட்டுமில்லாமல் பாக்கியம் மூலமாகத்தான் செழியன் வெளியே வரப் போகிறார்.

ஆனால் சுதாகர் உள்ளே புகுந்து அவருக்கு தெரிந்த நபர் மூலம் தான் செழியன் வெளியே வருவது போல் அனைவரிடமும் ஒரு டிராமாவை போட்டு விடப் போகிறார். இதைத்தான் ஒட்டு மொத்த குடும்பமும் நம்ப போகிறார்கள்.