கதிருக்கும் ராஜிக்கும் Love ட்ராக்.. முத்துவேலு எடுக்கப் போகும் முடிவு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி சொன்ன பிறகு கதிர் மீது எல்லாத்துக்கும் ஒரு மதிப்பு மரியாதையும் வந்துவிட்டது. அதனால் பாண்டியனுக்கு கோபம் வரவில்லை, தன் மகன் நல்லபடியாக வளர்ந்திருக்கிறான், பொறுப்பாக நடந்திருக்கிறான் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் செந்தில் நான் என்னுடைய எல்லா விஷயங்களும் கதிரிடம் மறைக்காமல் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் கதிர் அவனுடைய கல்யாண விஷயத்தை ஒன்று கூட சொல்லவில்லை என்று மீனாவிடம் பில் பண்ணுகிறார். அடுத்ததாக சரவணன் கதிர் பழனி மூன்று பேரும் சேர்ந்து கதிரை நக்கல் அடித்து பேசி கல்யாண கதையை பற்றி கேட்கிறார்கள். அப்பொழுது நான் சொல்லியிருந்தால் எல்லோரும் என்னை பாராட்டி இருப்பீங்க, ஆனால் ராஜி நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தான் வாயை மூடிக்கொண்டேன் என சொல்கிறார்.

அடுத்து ராஜி டியூஷன் எடுக்க போயிருக்கிறார் என்று தெரிந்து கதிர் கூப்பிட போகிறார். அந்த வகையில் ராஜி கதிர் மனம் விட்டு பேசி ஒருவர் மீது ஒருவர் இருக்கும் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் விதமாக பாசத்தை காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்வதற்கு ஏற்ப கதிர் ராஜிக்கு காதல் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

ரெண்டு பேரும் அப்படி பேசிக் கொண்டு வரும் பொழுது முத்துவேல் பைக்கில் வருகிறார். ராஜியை பார்த்ததும் முத்துவேல் பேசுவதற்கு வெயிட் பண்ணி இருக்கிறார். உடனே ராஜி, அப்பா என்ற பாசத்தில் முத்துவேல் இடம் பேசப் போகிறார். ஆனால் இதற்கிடையில் ராஜி சொன்ன எல்லா விஷயத்தையும் யோசித்துப் பார்த்து வடிவு, மகளை நினைத்து பீல் பண்ணி முத்துவேல் இடம் சொல்கிறார்.

நம் மகளின் நிலைமையை நாம் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கலை, அவளுக்கு பேசுவதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் தான் ஒருத்தனை நம்பி அவ்வளவு தூரம் போயிருக்கிறாள். அவனைப் பற்றி தெரிந்த பிறகு கூட நம்மிடம் வந்து சேராமல் பயத்தில் ஒரு தவறான முடிவை எடுத்து இருக்கிறாள்.

அதன் பிறகு அந்த கதிர் காப்பாற்றி நம் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பல விஷயங்களை முத்துவேலுக்கு புரிய வைக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய மனசும் மாறிவிட்டது மகளை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்.