Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சக்திவேல் கையில் ராஜி அடகு வைக்க போன நகை கிடைத்துவிட்டது. இத வைத்தே பாண்டியன் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று சக்திவேல், பாண்டியன் வீட்டு முன்னாடி பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். சக்திவேல், பாண்டியனை வர சொன்ன நிலையில் கோமதி போன் பண்ணி வர வைக்கிறார்.
ராஜிக்கும் இதுதான் பிரச்சனை என்று தெரிந்து விட்டது, உடனே மீனாவுக்கு போன் பண்ணி சப்போர்ட்டுக்கு கூப்பிடுகிறார். பிறகு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்ததும் ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா அனைவரும் குடும்பத்துடன் வந்து ராஜி அடகு வைக்கப் போன நகையைக் காட்டி பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தி பேசுகிறார்கள்.
ராஜி நான் அடகு வைக்கப் போனதுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நானா எடுத்த முடிவு, இவர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார். உடனே ராஜி சித்தி, காணாமல் போன நகை எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்ட பொழுது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பாதி நகையை மீட்டிட்டாங்க என்று போன் பண்ணி கூப்பிட்டாங்க. உடனே நானும் கதிரும் தான் வாங்கிட்டு வந்தோம்.
நகை கையில் கிடைத்ததுமே உங்களிடம் கொடுக்க சொல்லி கதிர் என்னிடம் சொல்லி விட்டான். நான் தான் கதிர் செய்த உதவிக்கு அவனுக்கு ஏதாவது பண்ணனும் என்று நினைத்தேன். அதனால் அவனுடைய பிசினஸ்க்கு உதவி பண்ணலாம் என்று நகை அடகு வைக்கப் போனேன். ஆனால் இது வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்.
இதைக் கேட்ட பாண்டியன் கோபத்துடன் நாங்களெல்லாம் செத்தா போயிட்டோம், எங்களுக்கு உதவி பண்ண தெரியாதா என்று திட்ட ஆரம்பிக்கிறார். உடனே சக்திவேல் இப்படி ஒரு டிராமாவை நான் பார்த்ததே இல்லை, அடகு வைப்பது போல் வை, விஷயம் தெரிந்தால் நான் இப்படி பேசுகிறேன் என்று எல்லாம் பிளான் பண்ணி பண்ணுகிறீர்களா என்று சக்திவேலும் முத்துவேலும் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பிக்கிறார்கள்.
உடனே ராஜி அம்மா அடிக்கடி பொய் சொல்வதும் நாடகம் ஆடுவதும் உனக்கு வேலையா போய்விட்டதா என்று திட்ட ஆரம்பிக்கிறார். அதற்கு ராஜி, ஆமா ஏன்னா நான் உங்களிடம் ஒரு உண்மையை மறைத்திருக்கிறேன். அதனால் தினமும் பொய் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்று கல்யாண கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். இதனை பார்த்த கோமதி, மீனாவிடம் என்னடி நடக்குது இங்கே என்று கேட்கிறார்.
அதற்கு மீனா, உங்களுக்கு புரியலையா ராஜி கல்யாண கதையை சொல்லப் போகிறார் என்று சொன்னதும் கதிர் கோமதி முழிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இத்தனை நாளாக மர்மமாக இருந்த கல்யாண ரகசியம் ராஜி மூலம் வெளிவரப் போகிறது. இதனால் பாண்டியனிடம் மாட்டிக் கொண்டு கோமதி அவஸ்தைப்பட போகிறார்.