Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் என்னதான் பாசமாக வீட்டில் இருப்பவர்களுக்கு பரிசுகளை வாங்கிட்டு வந்தாலும் லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்கியவர் என்பதால் பெருசாக செந்தில் மீது மதிப்பும் மரியாதையும் வராமல் போய்விட்டது. அதனால் தான் பாண்டியனுக்கும் செந்தில் மீது கோபம் இருக்கிறது.
அதற்கேற்ற மாதிரி செந்தில் கையில் வேலை கிடைத்ததும் ஓவராகத்தான் போகிறார் என்பதற்கு ஏற்ப பேச்சும் செயலும் எரிச்சல் படுத்தும் விதமாக அமைகிறது. மீனா என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பதில்லை, தன் கையில் வேலை சம்பளம் இருக்கிறது என்ற கர்வத்தில் இருக்கிறார். ஒரு நாள் அந்த வேலை இல்லாமல் போகும் பொழுது தான் தெரியும் செந்திலுக்கு பணத்தின் அருமை.
இப்பொழுது கூட எல்லா பணத்தையும் செலவழித்து விட்டார். மீனா வாங்கிய லோனுக்கு யாரு இஎம்ஐ கெட்ட போகிறார். இதெல்லாம் யோசித்து தான் பாண்டியன் கரராக இருக்கிறார், ஆனால் அது புரிந்து கொள்ளாமல் செந்தில் ஆடுகிறார். அடுத்ததாக குமரவேலு திருந்தியதாலும் பையன் தண்டனை அனுபவிக்க கூடாது என்பதாலும் மாரி, ராஜியை கூப்பிட்டு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேச சொல்கிறார்.
ஆனால் ராஜி இதைப் பற்றி எப்படி பேச என்று தெரியாததால் அமைதியாக போய்விடுகிறார். ஆனால் அண்ணனுக்காக நிச்சயம் ராஜி, பாண்டியனிடம் பேசி குமரவேலுவை காப்பாற்றுவார். அடுத்ததாக கதிருக்கு பிசினஸ் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனாலும் பணம் இல்லாததால் தவிக்கிறார் என்ற காரணத்திற்காக ராஜி உதவி செய்ய ஆசைப்படுகிறார்.
அந்த வகையில் இதை நிறைவேற்றும் விதமாக நடன போட்டி ஒன்று ஆரம்பமாகப் போகிறது. ஏற்கனவே நடனப் போட்டியில் ஜெயித்து கதிருக்கு பிடித்த பைக்கை வாங்கி கொடுத்தார். அதே மாதிரி இப்பொழுது பத்து லட்ச ரூபாய் பரிசு ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தால் 10 லட்ச ரூபாய் பரிசு என்பதால் கதிர்காக ராஜி ஜெயித்து பணத்தை வாங்கி கொடுப்பார்.