Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு வீட்டில் பார்த்த கல்யாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். அத்துடன் அரசிக்கு செஞ்ச துரோகத்தை எண்ணி பார்த்து வருந்துகிறார். இதனால் குமரவேல் திருந்தி விட்டார் என்று நினைத்தபொழுது அரசி தனியாக வருவதை பார்த்து குமரவேலு அரசிடம் சென்று நான் செய்தது மிகப்பெரிய துரோகம்.
உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார். அரசி எதுவும் சொல்லாமல் வந்த பொழுது பின்னாடியே குமரவேலு மன்னிப்பு கேட்டு வர ஆரம்பிக்கிறார். இதை பார்த்த சரவணன் தவறாக புரிந்து கொண்டு குமரவேலுமிடம் சண்டை போடுகிறார். உடனே அரசி, சரவணனை தடுத்து அங்கிருந்து கூட்டிட்டு போகிறார்.
இதையெல்லாம் பார்த்த குமரவேலு அரசியை சமாதானப்படுத்தி அரசியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அடுத்ததாக ராஜி, கதிருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் நடன போட்டியில் சேர வேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் சம்மதம் கொடுக்காத பொழுது அனைவரிடமும் பெர்மிஷன் கேட்டு வாக்குவாதம் பண்ணுகிறார்.
கடைசியில் அவர்கள் யாரும் பெர்மிஷன் கொடுக்கவில்லை என்று தெரிந்ததும் அவர்களை எதிர்த்து போட்டியில் கலந்து கொள்ள ராஜி முடிவு எடுத்து விடுகிறார். இதனால் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் ராஜ்யை காப்பாற்றும் விதமாக ஒட்டு மொத்த குடும்பமும் போய் நிற்கப் போகிறார்கள்.
இதற்கிடையில் தங்கமயில், எவ்வளவுதான் பட்டாலும் திருந்த மாட்டேன் என்று சொல்வதற்கு ஏற்ப சின்ன சின்ன சகுனி வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். இதனால் சரவணன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்.