சோகத்தில் பாண்டியன் குடும்பம்.. குட் நியூஸ் சொல்ல போகும் மருமகள்

Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அப்பா ஆகிவிட்டோம் என்று ஆசை ஆசையாக இருந்த சரவணனுக்கு ஏமாற்றமாக போய்விட்டது. ஆனால் சரவணனுக்கு வெறும் ஏமாற்றம்தான் தவிர தங்கமயில் தான் மனதார நொறுங்கிப் போய்விட்டார்.

அந்த வகையில் இந்த நேரத்தில் தங்கமயிலுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கூடவே இருந்து சரவணன் ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மொத்தமாக இடிந்து போயி அப்பாவிடம் பீல் பண்ணி பேசுகிறார். வீட்டிற்கு வந்த பிறகும் தங்கமயில் இடம் கோபத்தை காட்டி ஏற்கனவே சொன்ன பொய்களை வைத்து தங்கமயிலை திட்ட போகிறார்.

தங்கமயில் என்னதான் அம்மா பேச்சை கேட்டு ஓவராக பேசி இருந்தாலும் தற்போது பார்க்கவே பாவமாக இருக்கிறது. அடுத்ததாக சுகன்யா இந்த விஷயத்தை சக்திவேல் குடும்பத்திடம் சொல்கிறார். கோமதியும் தொடர்ந்து வீட்டிற்கு நிம்மதி இல்லாத விஷயங்கள் தான் நடந்து கொண்டே இருக்கிறது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

மீனா எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிய நிலையில் பாண்டியன் வந்து தங்கமயிலை கூப்பிட்டு ஆறுதல் படுத்துகிறார். அந்த வகையில் இப்பொழுது பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே சோகத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் சரி செய்யும் விதமாக மீனா மூலம் குட் நியூஸ் வரப்போகிறது. மீனாதான் அந்த வீட்டிற்கு மூத்த வாரிசு பெற்றெடுத்து கொடுக்கப் போவதாக கர்ப்பமான விஷயம் வெளிவர போகிறது.