Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று பாண்டியனின் மொத்த குடும்பமும் சந்தோசப்பட்டது. ஆனால் அது பொய்யான ரிசல்ட் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்து விட்டார்கள். ஆனால் இது தங்கமயில் வேண்டுமென்று சொன்ன பொய் அல்ல, தங்க மயிலும் ஆசை ஆசையாக காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அதை புரிந்து கொள்ளாத சரவணன், தங்கமயில் இந்த விஷயத்திலும் ஏமாற்றிவிட்டார் என்ற கோபத்தில் தங்கமயிலை தள்ளி வைக்கிறார். அதாவது தங்கமயில் மற்றும் அவருடைய குடும்பமும் ஏற்கனவே சரவணனிடம் படிப்பு விஷயத்தில் ஏமாற்றியதால் கோபத்தில் சரவணன் தங்கமயில் அம்மா வீட்டில் போய் விட்டிருந்தார்.
அங்கிருந்து இங்கு வருவதற்காக தான் கர்ப்பமான ஒரு டிராமாவை போட்டிருக்கிறார் என்று தவறாக சரவணன் புரிந்து கொண்டார். அதனால் தங்கமயில் பேச வருவதை காது கொடுத்து கூட கேட்காமல் சரவணன் மொத்த கோபத்தையும் காட்டி தங்கமயிலுக்கும் சரவணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி திட்டி விடுகிறார்.
இதனால் நொந்து போன தங்கமயில் அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் சரவணன், தங்கமயிலை கண்டுகொள்ளாமல் இந்த வீட்டில் ஒரு சேர் ஒரு கட்டில் போல தான் நீ இங்கே இருக்கணும். மற்றபடி உனக்கும் எனக்கும் எந்த உறவும் பந்தமும் இல்லை. உன்னால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் உன்னுடைய அம்மா வீட்டுக்கு போ என்று தங்கமயிலை நோகடித்து விடுகிறார்.
இதனால் மொத்தமாக தங்கமயில் உடைந்து போய்விட்டார். அடுத்ததாக குமரவேலு ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் அடுக்கி வாசிக்கிறார். தற்போது அரசியை காதலித்த நாட்களை எண்ணி குமரவேலு மனசில் மறுபடியும் ஆசை வர ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் இனி குமரவேலு எல்லா சேட்டைகளையும் நிறுத்திவிட்டு மனதார அரசி கூட வாழ்வதற்கு முயற்சி எடுக்கப் போகிறார். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.