Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இத்தனை நாளாக ராஜி கதிர் கல்யாண ரகசியம் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது எல்லாத்தையும் போட்டு உடைக்கும் விதமாக ராஜி கல்யாண கதையை சொல்லிவிட்டார். அதாவது கல்யாணத்துக்கு முன் வேறு ஒருவரை காதலித்தது அவருடன் போனது, ஆனால் அவன் என்னை ஏமாற்றி நகையும் பணத்தையும் தூக்கிட்டு போய் விட்டான்.
இதனால் நொந்து போன நான் வாழ பிடிக்காமல், சாகப்போன என்னை கதிர் சந்தித்து பேசி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டார். பிறகு அவர் என்னை சமாதானப்படுத்தி வீட்டில் கொண்டு போய் நான் விடுகிறேன் என்று சொன்னார். ஆனால் எனக்கு வீட்டுக்கு வர பயமாக இருந்ததால் அவரை என் கழுத்தில் தாலி கட்ட சொல்லுமாறு கேட்டேன். அவரும் எனக்காகவும் நம்மளுடைய குடும்பத்துக்காகவும் தாலி கட்டி கூட்டிட்டு வந்தார்.
அவர் என்னை ஏமாற்றவும் இல்லை, நகையை எடுத்துட்டு போகவும் இல்லை என்று சொல்லி அப்பா அம்மா அப்பத்தா என அனைவரது மீதும் சத்தியம் பண்ணி விட்டார். ராஜி சத்தியம் பண்ண பிறகு தான் எல்லோரும் உண்மை என்று நம்ப ஆரம்பித்தார்கள். அத்துடன் இதுவரை கோபமாக இருந்த முத்து, மகள் சொன்னதை நம்பி எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார். ஆனால் ராஜி, இதில் கோமதி மற்றும் மீனாவுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி பேசிவிட்டார்.
பாண்டியனிடம் கோமதி போடும் டிராமா
இதனால் பாண்டியனிடமிருந்து கோமதி தப்பித்து விட்டார், இருந்தாலும் மற்றவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று கோமதி ஒரு டிராமா போடும் விதமாக உங்க இஷ்டத்துக்கு இந்த மாதிரி பெரிய முடிவெல்லாம் எடுக்கக் கூடாது. பிறகு வீட்டில் பெரியவர்கள் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம் என்று சும்மா ராஜியை திட்டுவது போல் திட்டுகிறார்.
ஆனால் இவ்வளவு நடந்தும் பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ராஜி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அரசி இருந்த நிலைமையில் தான் நான் இருந்தேன் என்று சொல்லி புரிய வைக்கிறார். அந்த வகையில் பாண்டியனும் இந்த விஷயத்தை பெரிசு படுத்தாமல் அமைதியாகி போய்விடுகிறார். ஒரு வழியாக இத்தனை நாளாக மறைக்கப்பட்ட ஒரு உண்மை அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ராஜியின் அப்பா, மனதார கதிரை மருமகனாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் இனி பாண்டியன் குடும்பத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்காத படி சக்திவேல் இடம் சொல்லிவிடுவார். ஆனால் சக்திவேல் சொத்துக்கு ஆசைப்பட்டு, அண்ணனையே எதிர்க்கும் படி சூழ்ச்சி பண்ண போகிறார்.