ராஜிக்கும் கதிருக்கும் வரும் லவ் ட்ராக்.. குமரவேலுக்கு நடக்க போகும் கல்யாணம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜிக்கு நடந்தது பொய் கல்யாணம் தான் என்று வடிவு முத்துவேலுவிடம் சொல்லி நம்ம மகளை நம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துவிடலாம் என்று சொல்கிறார். அதுதான் சரியாகவும் இருக்கும் என்று முடிவு பண்ணிய முத்துவேல், வடிவை கூட்டிட்டு பாண்டியன் வீட்டு வாசலில் நின்று ராஜியை கூப்பிடுகிறார்.

ராஜி கோமதி மீனா மூன்று பேரும் அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பா சத்தத்தை கேட்டதும் ராஜி பாசத்துடன் வெளியே வந்து பார்க்கிறார். அப்பொழுது வடிவு உனக்கு நடந்தது உண்மையான கல்யாணம் இல்லை, பொய் கல்யாணம் தான். அதனால் நீ இங்கே இருக்க தேவையில்லை, வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று ராஜி கையை பிடித்து கூப்பிடுகிறார்.

அதற்கு ராஜி ஒரு நிமிஷம் என்று சொல்லி ரூமுக்குள் இருக்கும் கதிரிடம் போய் சொல்கிறார். கதிர் எதுனாலும் உன்னுடைய முடிவு உன்னுடைய இஷ்டம் என்று சொல்லியதால் ராஜி வாசலுக்கு வந்து எனக்கும் கதிருக்கும் முறைப்படி தான் கல்யாணம் ஆனது. சட்டபூர்வமாக ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி விட்டோம். அதனால் நான் அங்கு வந்து இருப்பது சரியாக இருக்காது.

இதுதான் என்னுடைய வீடு நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதை பார்த்த கதிர் ஒட்டுமொத்த சந்தோசத்துடன் துள்ளிக் குதிக்கிறார். கதிர் மனசுக்குள் இவ்வளவு காதல் இருக்கிறதா என்பதை காட்டும் விதமாக பயபுள்ள இத்தனை நாளாக மனசுக்குள் காதலை மறைத்து வைத்து தான் ராஜியை சீண்டிருக்கிறார். அதே மாதிரி ராஜியும் கதிரிடம் வந்து என்னை அனுப்பிவிட்டு நீ சந்தோசமாக இருக்கலாம் என்று நினைக்கிறியா?

அப்படி எல்லாம் உன்னை விட முடியாது என்று செல்லமாக சண்டை போடும் அளவிற்கு ராஜி கதிருடன் இருப்பதற்கு முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் இவர்களுடைய மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அடுத்து ராஜிக்கும் கதிருக்கும் லவ் ட்ராக் ஆரம்பிக்கப் போகிறது. இதனை அடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்த குமரவேலுவுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று வீட்டில் ஏற்பாடு பண்ணுகிறார்கள்.

அதனால் குமரவேலுக்கு ஜோடியாக சின்ன மருமகள் சீரியலில் தாமரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கவி தான் வரப்போவதாக தகவல் வெளியேறுகிறது.