ராஜி குடும்பத்துக்கு எதிராக திரும்பிய குமரவேலுவின் அம்மா.. ஓவராக ஆடும் செந்தில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி அப்பாவை பார்த்து நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டு அத்தை குடும்பத்தை எதிரியாக பார்க்க வேண்டாம். நீங்களும் நம்ம குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அண்ணனும் சீக்கிரத்தில் வெளியே வந்து விடுவான் என்று பாசமாக பேசுகிறார்.

அதனால் முத்துவேல் மனசும் கொஞ்சம் மாறிவிட்டது, ஆனால் இதையெல்லாம் பார்த்து தவறாக புரிந்த சக்திவேல் மகள் பாசத்தில் அண்ணன் அந்த பக்கம் சாய்ந்து விட்டார். இனி நம்மளுடைய கதி அதோ கதி தான், நம்ம பையனையும் கண்டுக்க மாட்டார் என்று கோபப்பட்டு வீட்டில் வந்து வாய்க்கு வந்தபடி தாறுமாறாக பேசுகிறார்.

இவன் எப்பொழுதும் இப்படித்தான் பேசுவான் என்று முத்துவேல் அமைதியாக போய்விட்டார். ஆனால் இதுவரை சக்திவேல் செய்த தவறுக்கும் குமரவேல் பண்ணிய அட்டூழியத்துக்கும் குரல் கொடுத்த மாரி முதல் முறையாக என் வீட்டுக்கார் சொல்வது போல் உங்களை எல்லாம் நம்பவே முடியவில்லை. வர வர உங்கள் நடவடிக்கைகள் எல்லாம் மாறிக்கொண்டே போகிறது என்று ராஜியின் அம்மாவிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

இதுவரை ஒற்றுமையாக இருந்த மாரி தற்போது சண்ட கோழியாக மாறி குமரவேலு பாசத்தில் புருஷனை கண்முடித்தனமாக நம்ப ஆரம்பித்து விட்டார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை வந்து இரண்டாக பிரியப் போகிறார்கள். அடுத்ததாக வேலைக்கு கிளம்பும் செந்தில் ஒரு மாசம் கூட முழுசா சம்பளம் வாங்கவில்லை. அதற்குள் ஓவராக ஆட்டம் போடுகிறார் என்று சொல்வதற்கு ஏற்ப பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆனால் இதெல்லாம் நிரந்தரம் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப பணம் கொடுத்து வேலை வாங்கிய செந்திலுக்கு முதல் மாசம் சம்பளம் வாங்காமலேயே வேலை பறி போகப்போகிறது. அடுத்து சரவணன் இடம் தங்கமயில் பாசமாக பேசி நினைத்ததை சாதிக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி சரவணன், தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கமயில் சொல்வதைக் கேட்க ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் எங்க போய் முடியப் போகிறதோ, அடுத்து கதிர் பிசினஸ்க்காக உதவி செய்ய வேண்டும் என்று பாண்டியன் சொன்னதாக கோமதி கதிரிடம் சொல்கிறார்.