அண்ணன்களால் துரத்தி அடிக்கப்படும் தம்பி.. வெறுப்பை விஷமாக கக்கும் கதிர்

Pandian Stores 2 today episode: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது கதிர்- ராஜி ஜோடி தான் ட்ரெண்டிங் கப்புல் ஆகிவிட்டது. திருமணமான பிறகு ராஜி இருக்கும் ரூம் பக்கம் கூட போகாத கதிர், மொட்டை மாடியில் தான் உறங்குகிறார். இதை பார்த்த பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் அவரை வலுக்கட்டாயமாக ராஜியிருக்கும் அறைக்குள் தள்ளுகின்றனர்.

உடனே ராஜியும், ‘மெத்தையில் படுத்துக்கொள் நான் வேண்டுமானால் கீழே போகிறேன்’ என்று கதிரிடம் கேட்க, உடனே கதிரும், ‘உனக்காக நான் நிறையவே கஷ்டப்படுகிறேன். என்னுடைய கட்டிலையும் இழக்க முடியாது’ என்று கோபத்துடன் சொல்கிறார். ‘சரியான முரடன்’ என்று ராஜி கதிரை பார்த்து சொல்ல உடனே கதிர், ‘அந்தக் கண்ணன் ரொம்ப நல்லவனா!’ என்று குத்தி காமிக்கிறார்.

செஞ்ச தப்பை மறக்காமல் மறுபடி மறுபடியும் சொல்லிக் காட்டுகிறார்களே! என்று ராஜி வருத்தப்படுகிறார். இந்த சீனை அப்படியே ராஜா ராணி படத்தில் இருக்கும் ஜான் ரெஜினாவின் கேரக்டரை பார்த்து சீரியல் இயக்குனர் அட்ட காப்பி அடிச்சிட்டார். மறுபுறம் அக்கா மற்றும் அண்ணன்களை விட்டுக் கொடுக்காமல் இரு வீட்டிலும் சமாதான பறவையாக இருக்கக்கூடிய பழனிவேல் தலை தான் இப்போது உருளுகிறது.

குற்றவாளியாகவே மாறிய பழனிவேல் 

‘ராஜி கதிரை காதலித்தது உனக்கு தெரியும் தானே!’ என்று அண்ணன்களான சக்திவேல், முத்துவேல் இருவரும் பழனிவேலை ரவுண்டு கட்டுகின்றனர். ‘உனக்கு இந்த வீட்ல சாப்பாடு கிடையாது, வெளியே போ!’ என்றும் சொந்த வீட்டில் அண்ணன்களால் பழனிவேல் விரட்டி அடிக்கப்படுகிறார். வேறு வழி இல்லாமல் பாண்டியன் வீட்டில் போட்டதை தின்னக்கூடிய நிலைதான் இப்போது பழனிவேல் இருக்கிறார்.

அதேபோல், ‘தம்பிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் சரவணன் ரொம்பவே கவலைப்படுவார். அவருக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பாண்டியன் கோமதியிடம் சொல்கிறார். கோமதியும், ‘கவலைப்படாதீங்க! சீக்கிரமே சரவணனுக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம். நீங்க நினைக்கிறது கண்டிப்பா நடக்கும்’ என்று பாண்டியனை சமாதானப்படுத்துகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது ரொம்பவே செண்டிமெண்டாக போவது சின்னத்திரை ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →