மரணப் படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஏற்பட்ட விடிவு காலம்.. வயித்தெரிச்சலில் சக்காளத்தி

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது கிளைமாக்ஸ் காட்சிகள் உடன் அதிரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பிரசாந்தை சுற்றி வளைத்து போலீசார் பிடித்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளனர். மேலும் ஏற்கனவே வீடியோ ஆதாரம் இருக்கும் நிலையில் அது போதாது என நீதிபதி கூறிவிட்டார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி ஜீவா மற்றும் கதிரை வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். அந்த சமயத்தில் தான் மரணப் படுக்கையில் உயிர் போராடிக் கொண்டிருந்த மீனாவின் அப்பா ஜனார்த்தனன் இப்போது சற்று குணமாகி மீண்டு வந்திருக்கிறார்.

மேலும் அவரிடம் போலீசார் விசாரணை செய்யும்போது பிரசாந்த் உண்மையான குற்றவாளி என்பதை ஜனார்த்தனன் கூறிவிடுகிறார். அதன் பிறகு ஜீவா, கதிரை விடுவித்து, பிரசாந்தை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இத்தனை நாள் பிறகு மீண்டும் கதிர் மற்றும் ஜீவா இருவரும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஆரத்தி எடுத்து அவர்களை வீட்டுக்குள் அழைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் கடைக்குட்டி கண்ணன் இல்லாதது ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம் தான். மேலும் பிரசாந்த் இப்போது கொலை வழக்கில் உள்ளே சென்றுள்ளதால் மல்லி கடும் கோபத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே தனத்துக்கு சக்காளத்தி ஆக வர இருந்த மல்லி இப்போது தனது மகனின் வாழ்க்கையை கெடுத்து விட்டதால் கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தனது மகனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த காரணத்தினால் வயித்தெரிச்சலில் மீண்டும் வில்லி அவதாரம் எடுக்க மல்லி போகிறார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இப்போது ஜனார்த்தனன் தனது மருமகன் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார். மேலும் அண்ணன் தம்பிகள் மீண்டும் ஒன்றிணைந்ததால் எந்த சதி வேலைகள் வந்தாலும் அவற்றை இனி முறியடித்து விடுவார்கள்.