Pandian Stores: விஜய் டிவியில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எப்போது எண்டு கார்டு போடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் தனத்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும்.
ஆனால் குழந்தை பிறக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் திடீரென அறுவை சிகிச்சைக்கு மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எப்படியாவது தனத்திற்கு உடனடியாக ஆபரேஷன் நடத்த வேண்டும் என்பதற்காக முல்லை மற்றும் மீனா ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.
அதாவது வீட்டில் எல்லோரும் இருக்கும்போது தனத்திற்கு பிரசவ வலி வந்த மாதிரி நடிக்க சொல்கிறார்கள். ஆனால் தனம் தனக்கு நடிக்க எல்லாம் தெரியாது என கூறுகிறார். உடனே மீனாவிடம் முல்லை போன் செய்து தனம் அக்கா நடிக்க மாட்றாங்க என புலம்பி தவிக்கிறார். தம்பிகள் மீது மட்டும் பாசம் வைக்கிற மாதிரி நடிக்கிறாங்க, இதை நடிக்க தெரியாதா என எப்போதும் போல மீனா கவுண்டர் கொடுக்கிறார்.
ஒரு வழியாக முல்லை அக்காவுக்கு வழி வந்ததாக அலற ஒட்டக் மொத்த குடும்பமும் பயந்து போய்விடுகிறது. அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு தனத்தை அழைத்து செல்கிறார்கள். அப்போது தனத்தின் கொழுந்தனார்கள் கிட்டே வரும் போது நடிக்க தெரியாது என்பதால் உடனே மயக்கம் வருவது போல் விழுந்து விடுகிறார்.
கடைசியில் தனத்திற்கு கேன்சர் என ரணகளத்துடன் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் பிரசவம் என்று கிளுகிளுப்பான காமெடி காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனையில் தனத்திற்கு சீக்கிரம் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் மூர்த்தி மறுக்கிறார்.
அவரை சமாதானப்படுத்தவும் மீனா மற்றும் முல்லை போடும் டிராமா வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஒரு வழியாக மூர்த்தி கடைசியில் தனத்தின் ஆபரேஷனுக்கு சம்மதிக்க உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்குப் பிறகுதான் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டை இயக்குனர் வரும் எபிசோடுகளில் வைக்க இருக்கிறார்.