நினைத்ததை சாதித்துக் காட்டிய மூர்த்தி.. பாசப்பிணைப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது அதிக விறுவிறுப்புடனும், பரபரப்புடனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புதிதாக கட்டிய கடையை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் கடையை திறப்பதற்காக ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் மாநகராட்சி அலுவலக வாசலில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்திற்கு பலனாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் மீது ஒட்டப்பட்ட நோட்டீசை அதிகாரிகள் எடுப்பது போன்ற புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அரசு அதிகாரி ஒருவர் கடையை நீங்கள் தாராளமாக திறக்கலாம் இனி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டு செல்கிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கடையை ஓபன் செய்து உள்ளே சென்று பார்வையிடுகின்றனர்.

கடை திறந்த மகிழ்ச்சியில் இருக்கும் மூர்த்தி, குடும்பத்தினர் அனைவருக்கும் கடையை சுற்றி காட்டி சந்தோஷப்படுகிறார். மேலும் வீட்டில் அனைவரையும் உட்கார வைத்து இன்னைக்கு என் கையால் தான் எல்லாரும் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்.

அதோடு தன் கையாலே சாப்பாடு எடுத்து தன் தம்பிகளுக்கு ஊட்டுகிறார். அப்போது கண்ணன் மட்டும் அங்கு இல்லாததை கவனித்த மூர்த்தி உடனே கண்ணனை அழைக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மூர்த்தியை ஆச்சர்யமாக பார்க்கிறது.

அண்ணன் கூப்பிட்டவுடன் வேகமாக ஓடி வரும் கண்ணை, மூர்த்தி உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விடுகிறார். சற்று முன்பு வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடையின் திறப்பு விழா கொண்டாட்டம் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.