Pandian Stores 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் எதிர்பாராத பல விருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பாபநாசம் படத்தை போல் க்ரைமை மறைக்கும் அளவுக்கு காட்சிகள் வர இருக்கிறது.
அதாவது அரசியை பின்தொடர்ந்து குமரவேல் வீட்டுக்கு வந்து விடுகிறார். அப்போது ஆத்திரத்தில் இருக்கும் குமரவேலை கட்டுப்படுத்துவதற்காக மீனா தோசை கல்லை எடுத்து மண்டையில் அடித்து விடுகிறார்.
இதனால் குமரவேலு மயங்கி கீழே விழுகிறார். உடனே அவரது தங்கை ராஜி குமரவேலுவை எழுப்ப முற்படுகிறார். அப்போது தான் தெரிகிறது குமரவேல் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதால் இறந்து விட்டார் என்பது.
குமரவேலுவின் கொலையை மறைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்
கோமதியும் தன் அண்ணன் மகன் இவ்வாறு போய்விட்டான் என்று கதறி அழுகிறார். மீனா செய்வது தெரியாமல் நிலை குலைந்து போய் இருக்கிறார். நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று ராஜிடம் புலம்புகிறார்.
இப்போது குமரவேல் உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த போகிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள். ஏனென்றால் சீக்கிரம் அரசியின் திருமணமும் நடைபெற உள்ளது.
அதோடு இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மானம் கப்பலேறிவிடும். மீனா ஜெயிலுக்கு போக நேரிடும் என்பதால் இதை மூடி மறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.